Anupama Parameswaran : பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷின் கொடி, ஜெயம் ரவியின் சைரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை அனுபமா நடிப்பில் உருவாகியுள்ள தில்லு ஸ்கொயர் படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமோஷன் கடந்த புதன்கிழமை நடந்த நிலையில் படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னலகட்டா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஆனால் பட விழாவில் அனுபாமா கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது படத்தின் நிறைய போஸ்டர்கள் முன்பு வெளியாகி இருந்தது. அதில் கதாநாயகன் உடன் மிகவும் நெருக்கமான காட்சி இடம் பெற்றிருந்தது.
இதனால் பெண்களே ஆவேசப்படும் காட்சிகள் இடம் பெற்றதால் அனுபாமா மோசமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அதோடு ரசிகர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளார். இதுகுறித்து அவர் முன்பே பேசிய நிலையில் இது போன்ற நெருக்கமான காட்சியை எடுப்பது மிகவும் கடினம்.
படப்பிடிப்பை கடினமாக எதிர்கொண்ட அனுபமா
மேலும் முதல்முறையாக இப்படிப்பட்ட காட்சியில் நடிப்பதால் அதை கடினமாக தான் எதிர் கொண்டிருந்தேன் என குறிப்பிட்டிருந்தார். அதோடு படத்தின் ப்ரோமோஷனுகாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் படத்தின் ஆர்வத்தை தூண்டுவதற்காக போஸ்டர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதனால் அனுபமாவிற்கு சங்கடம் ஏற்பட அவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. கதாநாயகியே படத்தின் ப்ரொமோஷனுக்கு வரவில்லை என்றால் கண்டிப்பாக படத்திற்கு பின் விளைவு ஏற்படும். மேலும் இது பற்றி கதாநாயகன் சித்து பட விழாவில் பேசியிருந்தார்.
தனது ரசிகர்கள் நடிகைகளை பற்றி பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லை மீறி பேசும் போது அவர்களை புண்படுத்தக் கூடும். தயவுசெய்து இதுபோன்று யாரும் செய்ய வேண்டாம் என்று சித்து கேட்டு கொண்டிருக்கிறார்.