பல வருடங்களாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நகைச்சுவை பேச்சாலும், கணீர் குரலாலும் பலரையும் ரசிக்க வைக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதன் மூலம் அவர் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து அவர் எது செய்தாலும் ட்ரோல் செய்யப்படும் நிலையும் அப்போது இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது அர்ச்சனா பல நிகழ்ச்சிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மிகப்பெரிய ரகசியம் ஒன்றை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.
அதாவது அவர் தன் கணவர் வினித்தை விவாகரத்து செய்யலாம் என்று ஒரு மாதத்திற்கு முன்பு முடிவு செய்திருக்கிறார். அதற்கான வேலைகளையும் இருவரும் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களின் மகள் சாரா இருவரையும் உட்கார வைத்து பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதிலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களின் பழைய நினைவுகளையும் ஞாபகப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அம்மா இல்லாமல் அப்பாவும், அப்பா இல்லாமல் அம்மாவும் வாழ்ந்து விட முடியுமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாத அவர்கள் இருவரும் தாங்கள் செய்ய நினைத்த விஷயம் எந்த அளவுக்கு முட்டாள்தனமானது என்பதையும் புரிந்து கொண்டார்களாம். அதன் பிறகு விவாகரத்து என்ற எண்ணத்தை அவர்கள் கைவிட்டிருக்கின்றனர்.
இதைப்பற்றி கூறியுள்ள அர்ச்சனா தன் மகளைப் பற்றியும் பெருமையாக பேசியுள்ளார். தற்போது 16 வயது துவங்க இருக்கும் சாரா சிறுவயதிலிருந்தே பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். எப்போதுமே முதிர்ச்சியுடன் பேசும் அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அழுது புலம்பாமல் புத்திசாலித்தனமாக பேசியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஒரு வகையில் அர்ச்சனா இப்படி ஒரு பெண் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் எல்லா விஷயத்திலும் ஜாலியாக இருக்கும் அர்ச்சனா இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு பின் சோசியல் மீடியாவில் அவர் குறித்து வந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக இருக்கிறது. அந்த மன அழுத்தத்தில் தான் அவர் 19 வருட திருமண வாழ்க்கையை உடைக்கும் முடிவுக்கு சென்றார் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.