பேட்டைக்காளி, வாடிவாசல் ஒரே கதை தானா.. வெற்றிமாறன் கூறிய ஷாக்கான பதில்

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் மனிதனின் வாழ்வியலையும், நாவலையும் அடிப்படையாகக் கொண்டு படங்களை எடுக்கக்கூடியவர். தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்த சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவ்வப்போது வெற்றிமாறன் சிறந்த படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் இயக்கிய பேட்டைக்காளி வெப் சீரிஸை வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இந்த தொடரில் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கிஷோர், ஷீலா, வேல ராமமூர்த்தி ஆகியோரும் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பேட்டைக்காளி வெப் சீரிஸும், வாடிவாசல் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படத்தின் கதையும் ஒன்று தானா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் இது குறித்து பேசி உள்ளார்.

அதாவது பேட்டைக்காளி இப்போதைய காலகட்டத்தில் உள்ள கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிவாசல் படம் தமிழ்நாட்டில் 60களில் உள்ள காலகட்டத்தில் உள்ளவாறு எடுக்கப்பட உள்ளது. இதனால் இந்த இரண்டு படத்தின் கதைக்களமும் வேறு என்று வெற்றிமாறன் தெளிவான பதிலை கொடுத்துள்ளார்.

இதனால் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி தயாரிக்க படங்களையும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று வருகிறது.