ஒரு படம் முடிக்கிறதுக்குள்ள இவ்வளவு பிரச்சனைகளா.? பிள்ளையார் சுழி போட்ட ரஜினி

பொதுவாக சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் சம்பள விஷயத்தில் தொடங்கி ஹீரோ, ஹீரோயின் என்று அனைத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கும். சில சமயங்களில் பாதிக்கு மேல் முடிந்த நிலையில் நின்று போன படங்களும் இருக்கிறது.

அந்த வகையில் முன்னணி இயக்குனர் ஒருவர் பல பிரச்சனைகளை தாண்டி எடுத்து வந்த அந்த திரைப்படம் தற்போது ஒரு வழியாக முடிவடைந்து இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில் எத்தனையோ திரைப்படங்கள் சொல்லும் படியாக இருந்தாலும் சந்திரமுகி திரைப்படத்திற்கென்று தனி சிறப்பு இருக்கிறது. மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு எடுத்து முடித்துள்ளார்.

முதலில் இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் தான் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் அவர் முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டார். அங்கு ஆரம்பித்தது தான் பிரச்சனை. அதை தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் பி. வாசு ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். ரஜினி நடிக்க மாட்டேன் என்று சொல்லிய பிறகு ராகவா லாரன்ஸ் அந்த படத்தில் நடிக்க கமிட்டானார்.

அதை தொடர்ந்து வடிவேலு உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் அதில் நடிக்க ஒப்பந்தமானார்கள். அதில் வடிவேலுவின் போக்கு வாசுவுக்கு பெரும் சங்கடத்தை கொடுக்க ஆரம்பித்தது. சம்பள விஷயத்தில் தொடங்கி படப்பிடிப்பு தளம் வரை அவர் கொடுத்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதனால் படப்பிடிப்பு ரொம்பவும் இழுத்துக் கொண்டே போனது. அதை தொடர்ந்து பி வாசுவும் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். மேலும் எப்படியாவது இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்து விட்டால் போதும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு இந்த படத்தின் பஞ்சாயத்துக்கள் கன்னி தீவு போல நீண்டு கொண்டே இருந்தது.

தற்போது இது அனைத்தும் முடிவுக்கு வந்து படத்தின் ஷூட்டிங்கும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அந்த வகையில் நேற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து இறுதி கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கும் இயக்குனர் விரைவில் படத்தை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.