Actor Ajith: கோலிவுட்டில் சரிக்கு சரியான படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தான் அஜித், விஜய். இவர்கள் இருவரும் இந்த வருடம் பொங்கல் அன்று துணிவு, வாரிசு படத்தை ரிலீஸ் செய்து நேருக்கு நேர் மோதி கொண்டனர். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் அசுர வேகத்தில் லியோ படத்தை முடித்துவிட்டு வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்யப் போகிறார்.
துணிவு படத்திற்குப் பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க கம்மிட்டானார். ஆனால் ஏகப்பட்ட பிரச்சனைகளால் மகிழ்திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காமலே இருக்கிறது. இதனால் விடாமுயற்சி எந்த முயற்சியும் இன்றி கைவிடப்படுகிறது என பல பேச்சுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் பட குழுவில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. விக்னேஷ் சிவனை அஜித் படத்திலிருந்து விலக்கிய பின்பு அவருடைய காதல் மனைவியான நயன்தாரா எவ்வளவோ கெஞ்சி பார்த்திருக்கிறார். இப்போது அஜித் இப்படி ஒரு நிலைமையில் இருப்பதற்கு காரணம் நயன்தாரா விட்ட சாபம் தான், இரண்டு மூன்று தடவை அஜித்திடம் கெஞ்சி கேட்டிருக்கிறார். ஆனால் கண்டுகொள்ளவில்லை என இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. துணிவு படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால் கதை பிடிக்கவில்லை என்று அதிரடியாக விக்னேஷ் சிவனை அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டனர். அதன் பின்பு விக்னேஷ் சிவனுக்கு இன்னும் படம் அமையவில்லை அதேபோல் இந்த படம் கைவிடப்பட்டால் மகிழ்திருமேனி நிலையும் இதே நிலைதான். இதை ஏன் அஜித் யோசிக்கவில்லை என கேட்கிறார்கள்.
அப்பேர்பட்ட குணம் கொண்டவர் அஜித் இல்லை. அப்படி என்றால் வேறு யாராவது அவரை தவறாக வழிநடத்துகிறார்களா என்று கேள்வியும் எழுகிறது. அப்படி இல்லை என்றால் அவருக்கு நடிக்க ஆசை இல்லையா, இப்படி பல அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிறது.
இதற்கு பதில் அனைத்தும் அஜித் சார்பாக வரவேண்டும். இதனால் ரசிகர்கள் மிகுந்த கவலையிலும் கடுப்பிலும் இருந்து வருகிறார்கள். இது எல்லாம் அஜித் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கண்டிப்பாக ஏதோ ஒரு பதில் கூடிய விரைவில் வரும் என கூறப்படுகிறது.