குவியும் பட வாய்ப்பு, வெறித்தனமான ஒர்க் அவுட் போடும் திமிரு பட நடிகை.. பாகுபலி உடன் கூட்டணி

Actess Sriya Reddy: பிரம்மாண்டத்தின் படைப்பாய், வெற்றியை பெற்று தந்த படமான பாகுபலி படத்தின் கதாநாயகன் தான் பிரபாஸ். தற்பொழுது இவருடன் கூட்டணி சேர இருக்கும் நடிகையின் முரட்டுத்தனமான ஒர்க் அவுட் போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகரான பிரபாஸ் 2015 மற்றும் 2017ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1 மற்றும் 2ல் மாபெரும் வெற்றியை பெற்றார். அதன்பின் சகோ, ரதே ஷயம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது மாறுபட்ட வேடத்தில் இவரின் ஆதிபுருஷ் படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து இவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த படங்களான சலார், ப்ராஜெக்ட் கே, ராஜா டீலக்ஸ் ஆகியவையில் கமிட் ஆகியுள்ளார். ஆதிபுருஷ் படத்தின் வெளியிட்டுக்குப் பிறகு இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில், தற்பொழுது சலார் படத்தில் திமிரு பட வில்லி நடிகையான ஸ்ரேயா ரெட்டி கமிட் ஆகி உள்ளார்.

2006ல் விஷால் நடிப்பில் வெளிவந்த படம் தான் திமிரு. இப்படத்தில் விஷாலுக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லி கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ஸ்ரேயா ரெட்டி. அதன் பின் இவர் மேற்கொண்ட படங்கள் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிபுரம் ஆகியவை சராசரி விமர்சனங்களை பெற்று தந்தது. அதன்பின் நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் சுழல் என்னும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்பொழுது பாகுபலி நாயகனான பிரபாஸ் உடன் இணையும் வாய்ப்பு பெற்று சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். 39 வயதாகும் இவர் தற்பொழுது பட வாய்ப்புக்காக தன் உடலை ஃபிட் செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து இவரின் வொர்க் அவுட் புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.

வைரலாகும் ஸ்ரேயா ரெட்டி புகைப்படம்

sriya reddy
sriya reddy

தற்பொழுது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் பவன் கல்யாண் இயக்கத்தில் ஓ ஜி என்னும் தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார். மேலும் திமிரு படத்தின் வெறித்தனமாக நடிப்பினை வெளிக்காட்டிய இவர் தற்பொழுது மேற்கொள்ளும் வெறித்தனமான ஃபிட்டிங் வொர்க் அவுட் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.