அருள்நிதி கிராமத்து கதை என்றால் பின்னி பெடல் எடுப்பார். தன்னுடைய முதல் படமான வம்சம் படத்திலிருந்து கிராமத்து கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார். அதன் பிறகு டிமான்டிக் காலனி போன்ற திரில்லர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்ததால் தொடர்ந்து இதே போன்ற கதைகளை தேர்வு செய்தார்.
இப்போது மீண்டும் பழையபடி கிராமத்து கெட்டப்பில் அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அருள்நிதி, துஷாரா விஜயன், முனிஸ்காந்த், சந்தோஷ் பிரதாப் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் என்று எல்லா உணர்வுகளிலும் அருள்நிதி சிறப்பாக நடித்துள்ளார் என்றும், இயக்குனர் கௌதம் ராஜ் துணிச்சலுடன் அவருடைய பாணியில் கிளைமேக்ஸ் காட்சிகளை கையாண்டு உள்ளார் என இயக்குனர் அறிவழகன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். கழுவேத்தி மூர்க்கன் படம் மத நல்லிணக்கம் மற்றும் நட்பை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. அருள்நிதி கிராமத்து இளைஞனாக பட்டையை கிளப்பி உள்ளார்.

ஆக்சன் காட்சிகள் படத்தின் அற்புதமாக அமைந்துள்ளதாகவும், கதாநாயகி துஷாரா விஜயன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படம் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக அமைந்துள்ளது. மேலும் இமான் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

நடிகர் சந்தோஷ் பிரதாப் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்துள்ளார். மேலும் சமூகத்துக்கு நல்ல மற்றும் அழுத்தமான கருத்துள்ள படமாக கழுவேத்தி மூர்க்கன் படத்தை கவுதம்ராஜ் எடுத்துள்ளார். அருள்நிதிக்கு கண்டிப்பாக இப்படம் நல்ல பெயரை கொடுக்கும்.