அருண் விஜய் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் வில்லனாக நடிக்க ஆரம்பித்ததன் பிறகு அவருடைய மார்கெட் உயர்ந்தது. இப்போது வெப் சீரிஸ், படம் என படு பிஸியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜயின் நடிப்பில் வெளியான யானை படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து இப்போது அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் வேலைகள் முன்பே முடிந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளி போய் வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இப்போது அருண் விஜய் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.
அதாவது சூர்யா பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யாவும், 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் விலகியது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக யார் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது வணங்கான் படத்தில் அருண் விஜய் தயாரித்தது, நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் சூர்யா மற்றும் அருண் விஜய் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆகையால் இந்த படத்தில் அருண் விஜய் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பாலாவின் வணங்கான் படத்தை தயாரித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பது அருண் விஜய்க்கு தெரிந்ததுதான். ஏனென்றால் ஏற்கனவே சூர்யா தயாரிப்பதாக சொல்லி பாதியிலேயே நின்று விட்டதால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. அருண் விஜய் இந்தப் படத்தை தயாரிப்பது கேள்விக்குறி தான்.
ஏனென்றால் தற்போது பாலாவை நம்பி படத்தை தயாரிக்க எல்லா தயாரிப்பாளர்களுமே பயப்படுகின்றனர். அப்படி இருக்கையில் வணங்கான் படத்தை தயாரிக்க இப்போது யாருமே முன்வரவில்லை. மேலும் இந்த படம் குறித்து வேறு ஏதாவது தகவல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.