சூர்யாவின் 2 ஆஸ்தான இயக்குனர்களை தட்டி தூக்கிய அருண் விஜய்.. இது பழிக்கு பழியா இல்ல பாவமா.?

நடிகர் விஜயகுமாரின் மகனாக அருண் விஜய் சினிமாவில் சுலபமாக நுழைந்து விட்டாலும் இன்று வரை தனக்கென ஒரு அந்தஸ்தை பெற படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் வெற்றி பெற வேண்டும் என துடித்துடித்துக் கொண்டிருந்த அருண் விஜய், சூர்யாவின் இரண்டு ஆஸ்தான இயக்குனர்களை தட்டி தூக்கி உள்ளார்.

சமீபத்தில் வெளியான அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இது ஏற்கனவே சூர்யா நடிக்க வேண்டிய அருவா படம்.

தற்போது எல்லோரும் எதிர்பார்த்த பாலா இயக்கி சூர்யா நடித்த வணங்கான் படம் பாதியில் கைவிடப்பட்டது. இந்தப் படத்தின் கதையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு சூர்யா செட் ஆக மாட்டார் என்று வணங்கான் படத்தை ட்ராப் செய்துவிட்டனர்.

அதை கரெக்டாக பயன்படுத்திக் கொண்டார் அருண் விஜய், அந்த படத்தில் தற்போது அவர் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருக்கிறார். இந்த படம் வந்தால் அருண் விஜய்யின் நடிப்பு மற்றும் பெரிய நட்சத்திரமாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சூர்யா கைவிடப்பட்ட முக்கிய இரண்டு இயக்குனர்களை தட்டி தூக்கியுள்ளார் அருண் விஜய். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மறைமுகமாக சூர்யாவை அருண் விஜய் பழிவாங்குகிறாரா என்ற கேள்வி எழுகிறது

எப்படி பார்த்தாலும் அருண் விஜய் அந்த இயக்குனர்களுக்கும் நல்ல வாய்ப்பை கொடுக்கிறார், தன்னையும் மெருகேற்றிக் கொள்கிறார். அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கும் வணங்கான் படத்திற்கான முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து, திரைக்கு வரும் போது தான் இந்த படம் சூர்யாவை பழி வாங்குவதற்காக கமிட்டான படமா? இல்லை பாவமா? என்பது தெரியவரும்.