அருண் விஜய்க்கு ரிலீசாகாமல் தலைவலி கொடுக்கும் 2 படங்கள்.. இட்லி கடைக்கு பின் வரப்போகும் சம்பவம்

அருண் விஜய் நல்ல திறமைகள் இருந்தும் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு தாமதமாக ஜெயித்தவர். பிரியம், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், தவம் என பல படங்கள் நடித்தும் ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்ட் கிடைக்கவில்லை.

சண்டை பயிற்சி , பாடி பில்டிங், டான்ஸ் என பலவற்றை வெளிநாடு சென்று கற்று வந்தார். ஆனால் இவருக்கு அதிர்ஷ்டம் என்பது மிக குறைவாக தான் இருந்தது. இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வியாபார ரீதியாக டல் அடித்தது. சினிமாவில் நிலையான ஒரு இடம் கிடைக்காமல் திணறி வந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் நடப்பது நடக்கட்டும் என இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தடையறத் தாக்க, என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் என அனைத்தும் சூப்பர் ஹிட். ஹீரோ என்ற ட்ரக்கை மாற்றி வில்லன் அவதாரம் எடுத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னை அறிந்தால், செக்கச் சிவந்த வானம், சாகோ போன்ற படங்களில் வில்லனாக நடித்த இப்பொழுது தனுஷின் இட்லி கடை படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்கள் அவருக்கு ரிலீஸ் ஆகாமல் தலைவலி கொடுத்து வருகிறது.

பார்டர்: 2023 ஆம் ஆண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் சரியான வியாபாரமாகாமல் கிடப்பில் கிடைக்கிறது. அருண் விஜய், ரெஜினா கசான்றா இதில் நடித்துள்ளனர். மிலிட்டரி சம்பந்தப்பட்ட கதைக்களம் இது. ஏற்கனவே பார்டர் என ஒரு படம் வந்திருப்பதால் இதற்கு ஜிந்தாபாத் என பெயர் மாற்றும் படி அறிவுறுத்தப்பட்டது.

ரெட்டதல: “பி டி ஜி யுனிவர்சல்” என ஒரு புது தயாரிப்பாளர் இந்த படத்தை கையில் எடுத்தார். ஆனால் படம் முடிந்த பின்னும் கூட இன்னும் ரிலீசாகவில்லை. அருண் விஜய்யின் 36-வது படமாக இது வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓராண்டுக்கு முன்னரே இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்தது. இப்பொழுது இட்லி கடை படத்திற்கு பிறகு இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.