ரீமேக் இயக்குனருடன் மாஸ் கூட்டணியில் அருண் விஜய்.. டைட்டிலுடன் வெளிவந்த வீடியோ!

அருண் விஜய் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி பல படங்களில் பிசியாக உள்ளார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்த தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரிலும் அருண் விஜய் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரீமேக் இயக்குனருடன் கூட்டணி போட்டுள்ளார் அருண் விஜய். அதாவது கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஏ எல் விஜய் பல படங்களை ரீமேக் செய்துள்ளார். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா, இது என்ன மாயம் போன்ற பல படங்களை விஜய் இயக்கியிருந்தார். தற்போது அருண் விஜய் உடன் கைகோர்த்துள்ள ஏ எல் விஜய் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை எடுக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் ஏ.எல். விஜயின் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன் இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை ஸ்ரீ சாய் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனை சுற்றி நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் 25 நாட்கள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அருண் விஜயின் அச்சம் என்பது இல்லையே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்ட வருகிறது.