வசமாய் சிக்குன ஆடு.. வளரும் போதே கேரியரை க்ளோஸ் பண்ண, விபரீத முடிவெடுத்த அருண் விஜய்

அருண் விஜய் சினிமாவில் சுலபமாக நுழைந்து விட்டாலும் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற பல வருடங்கள் போராடி உள்ளார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் துவண்டு போய் இருந்தார். அப்போது தான் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அருண் விஜய் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் சாதுரியமாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். மேலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விட்டார். அதன்பிறகு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் அடித்து நொறுக்கி வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடையற தாக்க, தடம் போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்தனர். இதனால் அந்த படங்கள் கமர்சியல் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி மீண்டும் அஜித்துடன் இணையும் வாய்ப்பு ஏகே 62 படத்தில் அருண் விஜய்க்கு கிடைத்துள்ளது. மகிழ்திருமேனி இயக்கம் இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் தானாக முன்வந்து வசமாக ஒரு படத்தில் அருண் விஜய் சிக்கி உள்ளார். பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வணங்கான் படம் உருவாகி வந்தது. பாலா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

இப்போது பாலாவே வணங்கான் படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாலா தனது படங்களில் ஹீரோவை படாத பாடு படுத்திவிடுவார்.

அதுமட்டுமின்றி பாலா படத்தில் ஒரு ஹீரோ ஒப்பந்தம் ஆனால் வேறு படங்களில் நடிக்க முடியாது. ஏனென்றால் முற்றிலுமாக ஹீரோவின் கெட்டப்பை பாலா மாற்றி விடுவார். அதுமட்டுமின்றி இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரே படத்தை இழுத்தடிப்பார். ஆகையால் பாலாவிடம் அருண் விஜய் சிக்கிக்கொண்டார்.