Director Bala and Actor Arun Vijay: இயக்குனர் பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பது நிதர்சனமான உண்மை.. ஆனால் இதை அடைவதற்காக அவருடைய படங்களில் எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியும் ரொம்பவே மெனக்கெடு செய்து எடுப்பார். மேலும் இவர் படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை படாதபாடு படுத்தி வேலை வாங்குவார்.
அதனால்யே தற்போது காலகட்டத்தின் படி இவரிடம் எந்த முன்னணி நடிகர்களும் கமிட்மெண்ட் செய்து கொள்ளாமல் இவரை ஒதுக்கி விட்டார்கள். அப்படித்தான் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்காமல் விலகிக் கொண்டார். அதன் பின் நடிகர் அருண் விஜய்யை கமிட் செய்தார்.ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் அருண் விஜய்யை படாத பாடு படுத்திக் கொண்டு வருகிறார் என்று பல விஷயங்கள் வெளிவந்தது.
தற்போது இதற்கு எதிர் மாறாக மாறி உள்ளது. அதாவது இயக்குனர் பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணி செட் ஆகிவிட்டதாம். சூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதுமே கலகலப்பாக பாலா சுற்றி திரிகிறாராம். இதுவரை இல்லாத எனர்ஜியுடன் அனைவரிடமும் எதார்த்தமாக பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறாராம்.
அதனால் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% முடிந்திருக்கிறது. இன்னும் 28 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அந்த 28 நாட்களும் திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரியில் சூட்டிங் நடக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இப்பொழுது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வணங்கான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது.
அத்துடன் படப்பிடிப்பில் இதுவரை பேசாத பாலா தற்போது சில விஷயங்களை செய்து பலரும் ரசிக்கும்படி அட்ராசிட்டிகளை ஜாலியாக செய்து வருகிறார். இந்த மாற்றத்திற்கு மொத்தமும் காரணம் அருண் விஜய் தான். பாலாவின் ஒட்டுமொத்த திமிரையும் அடக்கியது இவர்தான் என்றே சொல்லலாம். இதே நிலைமையில் இருந்தால் அவர்கள் நினைத்தபடி இன்னும் 28 நாட்கள் படபிடிப்பு முடிந்துவிடும்.
அடுத்து மொத்தமாக இப்படத்திற்கு பூசணிக்காய் உடைக்க வேண்டியது தான். மேலும் பல போராட்டங்களை கடந்து வந்த வணங்கான் படம் பாலா மற்றும் அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்குப் பிறகு அருண் விஜய் நினைத்தபடி சினிமா கேரியரில் அவருக்கென்று ஒரு இடம் கிடைத்துவிடும்.