Actor Arunvijay : அருண் விஜய் இப்போது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் ஹீரோவாக அருண் விஜய்யால் ஜொலிக்க முடியவில்லை. ஆனாலும் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அருண்விஜய் அடம்பிடிக்கவில்லை.
தனக்கு எது சரிபட்டு வரும் என்று உணர்ந்து வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்றால் இதை சொல்லலாம்.
அதன் பிறகு தான் ஹீரோவாகவும் அருண் விஜய்யால் ஜொலிக்க முடிந்தது. மேலும் கடைசியாக அவரது யானை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அருண் விஜய் தனது பிறந்தநாளில் ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் இடம் பேசிக் கொண்டிருந்த போது நெகிழ்ச்சியான சம்பவம் ஏற்பட்டது.
அதாவது வயதான பாட்டி ஒருவர் அருண் விஜய்யின் கையைப் பிடித்துக் கொண்டு தனது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறினார். மேலும் அவரை குணப்படுத்த உதவும் மாறும் கேட்டுக் கொண்டார். அருண்விஜய் அந்த பாட்டியிடம் உதவுவதாக வாக்கு கொடுத்தார்.
அதற்கான வேலையை உடனடியாக செய்யுங்கள் என்று அருண் விஜய் தன்னுடன் இருந்த ஒரு நபரிடம் கூறியிருந்தார். மேலும் பாட்டி கை கூப்பி தனது நன்றியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியவுடன் அருண் விஜய்யை பலரும் பாராட்டி வருகிறார்கள்.