விஜய் சேதுபதி போல் மாற விரும்பும் ஆர்யா.. லிங்குசாமி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு

இந்திய சினிமாவில் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் பெயர்தான் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தெற்கு முதல் வடக்கு வரை உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் விஜய் சேதுபதியின் பங்களிப்பும் இருப்பதுதான்.

இது எல்லாத்துக்கும் அடிபோட்டது தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த படத்தில் கிடைத்த பவானி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து இந்திய ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டார் விஜய் சேதுபதி.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு படவாய்ப்புகள் மலைபோல் குவிந்து வருகின்றன. ஒரே நேரத்தில் கைவசம் 26 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

வில்லன் வேடத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆர்யாவும் அந்த மாதிரி ஒரு பெரிய வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவருக்கும் இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வரவேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா.

அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் போதணி என்பவரை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பவானியை மிஞ்சும் அளவுக்கு மிகப் பிரம்மாண்ட வில்லன் வேடம் ஒன்று இருக்கிறதாம். அதற்கு ஆர்யாவை சிபாரிசு செய்து வருகிறார்.

ஆர்யாவும் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ஆர்யா, அல்லு அர்ஜுன் உட்பட சில நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இந்த படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய அளவில் தனக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொள்ள ஆர்யா ஆசைப்படுகிறாராம்.

aarya-cinemapettai
aarya-cinemapettai