அடிக்கிற வெயில்ல வீட்ல இருக்க முடியாம தியேட்டருக்கு போனா, அங்கு வெயிலே மேல் என்று சொல்லும் அளவுக்கு ஆர்யாவின் அலப்பறை தாங்கல. ஆர்யா நடிப்பில் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் 2ம் தேதி வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்திற்கு 20% வசூலைக் கூட தொட முடியாமல் தயாரிப்பு நிறுவனம் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறது. முத்தையா இயக்கத்தில் ரிலீசான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் முதல் முதலாக ஆர்யா கிராமத்து கெட்டப்பில் மிரட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் திரையரங்கிற்கு செல்கின்றனர்.
வெயில் தாங்க முடியாமல் உள்ளே போய் உட்கார்ந்தா படத்தை பார்க்க முடியாமல் வெயிலே பரவாயில்லை என்று தலை தெறிக்க ஓடிவரும் ரசிகர்கள் தான் அதிகம். தியேட்டர்ல ஆளே இல்லாம படத்தை ஓட்டறாங்க. இந்த படத்துல எப்படி போட்ட காசை எடுக்க முடியும் என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.
இந்த படத்துக்கு ஆர்யாவோட சம்பளம் 14 கோடி , முத்தையாவுக்கு மூன்றரை கோடி. ஆனால் படத்தோட மூணு நாள் வசூல் வெறும் மூணு கோடி. இந்த லட்சணத்துல படம் ஓடினால் இன்னும் ரெண்டு நாள்ல படத்தை தூக்கிடுவாங்க. அந்த அளவுக்கு தான் படம் ஓடிக்கிட்டு இருக்கு. ஆர்யா ஆசைப்பட்டு ரொம்ப வருடம் கழித்து தியேட்டரில் ரிலீஸ் ஆன காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் இப்படி ஆயிடுச்சு.
அரண்மனை 3, எனிமி, கேப்டன், வசந்த முல்லை அதன் தொடர்ச்சியாக இப்போது காதர் பாட்ஷாவும் ஆர்யாவின் பிளாப் படம் படங்களின் லிஸ்டில் சேர்ந்து விட்டது. முத்தையா இதற்கு முன்பு இயக்கிய கொம்பன், குட்டி புலி, புலிக்குத்தி பாண்டி, மருது, விருமன் போன்ற படங்களை பார்க்கும் போது ஒரே டெம்ப்லேட்டில் உருவாக்கப்பட்டது போலவே தெரியும். அதேபோன்றுதான் காதர் பாட்ஷா படத்தை பார்க்கும் போதும் பீல் ஆகிறது.
படம் முழுக்க சண்டை, ஹீரோ ஹீரோயின்களுக்கு ரொமான்ஸ் சுத்தமாகவே ஒட்டவில்லை. இப்படி ஏகப்பட்ட விஷயத்தில் முத்தையா சொதப்பி வைத்திருந்தார். இதனால் அடுத்ததாக முத்தையா படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஜெயம் ரவி இந்த படத்தை பார்த்து வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை.