அரண்மனை 3, எனிமி போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இருப்பினும் இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு கிடைத்த வெற்றியை வைத்து ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் கேப்டன். இந்தப் படம் படு மொக்கை விமர்சனத்தை பெற்று பிளாப் ஆனது .
அதை தொடர்ந்தும் இவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் சம்பளத்தையும் ஏற்றி விட்டார். அதற்கு தகுந்தார் போல் இவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகுதா என்பது கேள்விக்குறிதான். அவருக்கு கடைசியாக ஓடிய படம் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தை இன்று வரை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படமானது சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதைதான். இந்தப்படத்தில் துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்து கலக்கினர்.
இப்படம் 1970-களில் நடப்பது போல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அமேசான் தளத்திலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.
அத்துடன் ஆர்யாவின் சினிமா கேரியரிலும் இந்த படம் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் படத்தின் வெற்றியை காட்டி தான் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார். இப்போது ஆர்யா கொம்பன் முத்தையா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கேப்டன் படம் ப்ளாப் ஆனதால் சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா இல்லை. உயர்த்தியது உயர்ந்தது தான் தான். இனிமேல் எல்லாம் குறைக்க முடியாது என்று அடம்பிடித்து வருகிறார். இருந்தாலும் அவர் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் தான் கொஞ்சம் யோசனையில் இருக்கின்றனர்.