ஆர்யா தமிழ் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் ஹீரோவாக ஆர்யாவை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஒரு உச்ச நடிகராக தற்போது வரை அவரால் வளர முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இவரை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது. இதில் ஆர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த ஒரு வெற்றி படத்தை கொண்டு ஆர்யா அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் படுமோசமான தோல்வியை கொடுத்துள்ளார்.
பரமபதம் விளையாட்டு போல் ஒரு படத்தினால் உச்சாணிக்கொம்பிற்கு போன ஆர்யா பாம்பு கொத்தியது போல் மீண்டும் அதல பாதாளத்துக்கு அவரது மார்க்கெட் வந்துள்ளது. இதற்குக் காரணம் அவர் நடித்த கேப்டன் படம். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இந்தப் படம் கிட்டத்தட்ட 30 கோடியில் இருந்த 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஆனால் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. கேப்டன் படம் ஆர்யாவுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.
இப்படம் மொத்தமாக ஒரு கோடி தான் வசூல் செய்திருந்தது. அதுவும் வெளிமாநிலங்களில் போஸ்டர் ஒட்டிய காசுக்கு கூட வசூல் செய்யவில்லையாம். மேலும் இந்த படம் சரியாக போகவில்லை என்பதால் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அதாவது செப்டம்பர் 30-ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.