Jayam Ravi: ஒரு நேரத்தில் ஜெயம் ரவி நடித்த படங்களை பார்க்க ஆசையாகவும், குடும்பத்துடன் ரசிக்கும் படியாகவும் தான் இருக்கும். இப்போதெல்லாம் இவரிடம் இருந்து அந்த மாதிரியான படங்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் சுத்த வேஸ்ட் என்று மக்கள் கழுவி கழுவி ஊற்றி ஜெயம் ரவியை திட்டி தீர்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமான படமாக இருக்கிறது.
அதனால் தான் இப்படம் வெளிவந்த ஒரு வாரத்திலேயே எந்த தியேட்டர்களிலும் ஓடவில்லை. அப்படியே ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடினாலும் இப்படத்தை பார்ப்பதற்கு அதிகபட்சமாகவே நான்கு, ஐந்து பேர் தான் வந்துட்டு போகிறார்களாம். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டரில் ஈ ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.
அதனால் ஒரேடியாக இந்த படத்தை போட்டு நஷ்டப்பட வேண்டாம் என்று ஷோவையே நிப்பாட்டி விட்டார்கள். அத்துடன் இப்படத்திற்கு ஏற்பட்ட மொத்த நஷ்டத்தையும் ஜெயம் ரவி தான் ஏற்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இவரால தான் மொத்த படமும் ஓடவில்லை என்றும் இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வருகிறது.
அது மட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கு சரியான முறையில் வராமல் கால் சீட்டில் அதிகமாக சொதப்பி வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இப்படத்தை யாரும் குடும்பத்துடன் பார்க்க வந்திடாதீர்கள் என்று சொல்லி மக்களை அதிக அளவில் குழப்பி இருக்கிறார். அதற்கேற்ற மாதிரியும் படத்தை யாருமே குடும்பமாக வந்து பார்க்கவில்லை.
அப்படியே இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் பேர் வந்தாலும் தலையில் அடித்து புலம்பி கொண்டு தான் வெளியே போனார்கள். அந்த அளவுக்கு மோசமான நடிப்பையும் கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று ஜெயம் ரவி மீது ரசிகர்கள் வெறுப்பை கொட்டிக் கொண்டு வருகிறார்கள். அதனால் இதிலிருந்து சீக்கிரமாக மீள வேண்டும் என்பதால் இவருடைய அஸ்திவாரத்தை பயன்படுத்த முடிவெடுத்து இருக்கிறார்.
அதற்காக இவருடைய அண்ணன் மோகன் ராஜா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிக் கொண்டு வருகிறார். அதாவது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தை யாருமே மறக்க முடியாத அளவிற்கு தரமான சம்பவமாக படம் வேற லெவலில் வெற்றி கொடுத்திருக்கும். அந்த வகையில் இப்பொழுது இருக்கும் தோல்வியை ஈடு கட்டுவதற்காக உடனடியாக தனி ஒருவன் இரண்டாம் படத்தை சீக்கிரமாக முடித்து வெளியிட்டால் கேரியரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று அண்ணனிடம் தஞ்சம் அடைந்து வருகிறார்.