அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ள தூங்குமூஞ்சி அஸ்வின்.. இப்படியே போனா ஹீரோ இனி ஜீரோ தான்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியவர் நடிகர் அஸ்வின் குமார். அதன்பிறகு அவர் நடித்த ஆல்பம் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் தன்னுடைய பட பாடல் வெளியீட்டு விழாவின் போது இந்த படத்திற்கு முன்பு நான் நாற்பது கதைகளை கேட்டேன். ஆனால் அந்த கதைகளை கேட்கும் போது தூங்கி விட்டேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தனக்கு எதிராக கிளம்பிய இந்த எதிர்ப்புகளை கண்டு பயந்து போன அஸ்வின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அதையடுத்து ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் தற்போது அஸ்வின் மற்றும் ஓர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது இவரிடம் இயக்குனர் கதை சொல்ல வேண்டும் என்று கூறினால் கதை கேட்பதற்கு ஸ்டார் ஹோட்டலில் தான் ரூம் போட வேண்டும் என்று சொல்கிறாராம். அதுமட்டுமல்லாமல் அவர் சொல்லும் ரூம் நம்பர் தான் புக் செய்ய வேண்டுமாம். சரி என்று அவர் கேட்டபடியே ரூம் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால் கதையை கேட்க அஸ்வின் கடைசி வரை வரவில்லையாம். அதன் காரணமாக தயாரிப்பாளர் அஸ்வின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இனி அஸ்வின் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அந்த கேரக்டருக்கு பிக்பாஸ் புகழ் கவினை புக் செய்துவிட்டாராம்.

ஏற்கனவே அஸ்வின் பேசிய பேச்சால் அவரை யாரும் தங்களுடைய படத்தில் புக் செய்யக்கூடாது என்று பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது அஸ்வினுக்கு ஆதரவாக பேச யாரும் முன்வரவில்லை. அதை மனதில் வைத்தாவது அஸ்வின் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.

ஆனால் தனக்கு மட்டும் தான் இவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்ற ஆணவத்தில் அவர் போடும் ஆட்டம் அவரை சினிமாவை விட்டு ஓரங்கட்டி விடும். இது தெரியாமல் தன்னை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு இவ்வளவு அலப்பறை கூட்டுவது அவரது எதிர்கால சினிமா வாழ்விற்கு நல்லதல்ல.