தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது திரைப்படம் அசுரன். தனுஷின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக அசுரன் படம் அமைந்தது.
இளம் நடிகர் தனுஷ் முதிர்ச்சியான கதாபாத்திரம் ஏற்று சிவசாமியாகவே வாழ்ந்து காட்டினார். அதுமட்டுமில்லாமல் படத்தில் உடன் நடித்த மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே என ஒவ்வொரு கதாபாத்திரமும் முத்திரையை பதிக்கும் வகையில் அமைந்தது.

தற்போது அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்து அமேசான் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். மேலும் அந்த படத்தில் ஹீரோவாக வெங்கடேஷ், நாயகியாக பிரியாமணி போன்றோர் நடித்திருந்தனர்.
தமிழுக்கும் தெலுங்குக்கும் கொஞ்சம்கூட வித்தியாசமே இல்லாமல் ஒரே மாதிரி படம் அமைந்ததால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. ஆனால் அசுரன் படத்தை பார்க்காத தெலுங்கு ரசிகர்கள் நாரப்பா படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் சிறந்த நடிகரா? வெங்கடேஷ்? சிறந்த நடிகரா என இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் ஒப்பிட்டு இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர். வெங்கடேஷ் ரசிகர்கள் அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்துள்ளார் என ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் தனுசை விட்டுக் கொடுக்க விரும்பாத தனுஷ் ரசிகர்கள், இளம் வயதிலும் முதிர்ச்சியான வேடம் ஏற்று நடிக்க ஒரு தில்லு வேணும், அதை தனுஷ் அசால்டாக செய்தார் என அவர்களது பங்குக்கு தனுஷுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இதனால் இணையதளமே கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது என்று சொல்லலாம்.