நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முன்னாள் கணவர் தனுஷுடனான விவாகரத்துக்குப் பின்னர் திரைப்படங்களை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே லால் சலாம் என்ற திரைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இவர் இயக்க உள்ளார்.
அண்மையில் சென்னையில் இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் பூஜைக்கு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனரான சுபாஷ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இத்திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகி உள்ளனர்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிகர் சங்கத்தால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது ஆட்டத்தை நன்கு வெளிப்படுத்திய நிலையில், இவர்களை இத்திரைப்படத்திற்கு சரியாக இருப்பார்கள் என லால் சலாம் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனிடையே லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில், இப்படத்தில் முதன்முதலில் அனிருத் இசையமைப்பார் என உறுதிசெய்யப்பட்டது.ஆனால் அனிரூத் இப்படத்திற்காக கேட்ட சம்பளம் லைகா தயாரிப்பு நிறுவனத்தை உலுக்கியது எனலாம். 3 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள அனிருத், லால் சலாம் திரைப்படத்திற்காக 5 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளாராம்.லைகா தயாரிப்பில் இரண்டு படங்களுக்கு சேர்த்து 10 கோடி அனிருத் கேட்டுள்ளார். அதில் ஒரு படத்தை கொடுத்துவிட்டு ஒரு படத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது அந்நிறுவனம்.
இதனால் அந்த சம்பளத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுத்து அவரையே இப்படத்தில் இசையமைக்க வைக்கலாம் என தயரிப்பு நிறுவனம் முடிவு செய்தது . மேலும் இந்த முடிவு ரஜினிகாந்தின் முடிவு எனவும் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் முதல் முதலாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதனிடையே அனிருத், நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர் என்பதால் அனிருத்தை இத்திரைப்படத்தில் சேர்த்தால் தனது மகளுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற நோக்கத்தில் அனிருத்தை லால் ஸலாம் திரைப்படத்திலிருந்து ரஜினிகாந்த் விலக்கியதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.