Actor Atharva: சினிமாவிற்குள் அப்பாவின் புகழால் வந்திருந்தாலும் தன்னுடைய தனித்திறமையை வைத்து முன்னேற வேண்டும் என்று மிகவும் போராடி வருபவர் அதர்வா. இவர் நடித்த முதல் படத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி தோல்வியை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இவருக்கு மூன்று நான்கு படங்கள் வந்த நிலையில், சில காரணங்களால் அது அனைத்தும் நிலுவையில் இருக்கின்றன. அந்தப் படமே முடியாத தருணத்தில் இருக்கும் பொழுது இவருடைய அடுத்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட ஆரம்பித்து விட்டார்.
அதற்காக இவர் கூட்டணி வைக்கும் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ். இவர் இயக்கிய படங்கள் ஒரு நாள் ஒரு கூத்து, ஃபர்கானா, மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் . இந்த மூன்று படங்களுமே வெவ்வேறு கதைகளைக் கொண்டு அமைந்திருக்கும்.
அதிலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் படம் காதல், நகைச்சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் அதர்வாவை வைத்து வித்தியாசமான படத்தை கொடுக்க இருக்கிறார். இன்னும் சொல்ல போனால் அதர்வா இதுவரை ஒரு சீரியஸான கேரக்டர் தான் நடித்து வந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவருக்கு இப்படம் வேறொரு பரிமாணத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. எப்படியாவது தன்னை முன்னிலை காட்டி விடமாட்டோமா என்று படாத பாடுபட்டு வருகிறார். அட்லீஸ்ட் அப்பா வாங்கிய பெயரை எடுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
மேலும் இவர் வாரிசு நடிகராக இருக்கப் போய் தான் இவ்வளவு நாளாக சினிமாவில் தாக்கு பிடிக்க முடிந்தது. இல்லை என்றால் இந்நேரம் எங்கேயோ காணாமல் போயிருந்திருப்பார். தற்போது இவர் நடிக்கும் புது படத்தின் மூலம் இவருக்கு நல்ல காலம் பிறக்குதா என்று பார்க்கலாம்.