DNA Review : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் நிமிஷா விஜயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது டிஎன்ஏ படம். படத்தின் கதைகளமே வித்தியாசமாக அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
அதாவது முந்தைய காதல் பிரிவால் குடிக்கு அடிமையாகி இருக்கிறார் அதர்வா. இதனால் மறுவாழ்வு மையத்திற்கு சென்று ஒரு புதிய மாற்றத்துடன் வருகிறார். மறுபுறம் நிமிஷா வித்தியாசமான குணாதிசயம் கொண்டதால் அவருக்கு திருமண வரன்கள் தட்டி செல்கிறது.
கடைசி அதர்வா, நிமிஷா இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் இது தன்னுடைய குழந்தை இல்லை என நிமிஷா கூற படம் சூடு பிடிக்கிறது. அப்படி என்றால் மருத்துவமனையில் குழந்தை மாற்றப்படுகிறதா என்று ஒரு பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் விமர்சனம்
அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது என்னென்ன சம்பவங்கள் அதிர்ச்சி தர காத்திருக்கிறது என்பது தான் டிஎன்ஏ படம். படத்திற்கு பிளஸ் என்றால் மிகவும் சரியாக வடிவமைக்கப்பட்ட திரில்லர் படம் ஆக இருக்கிறது. அதுவும் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் மற்றும் பதட்டமான காட்சிகள் ரசிகர்களை கவர்கிறது.
மேலும் அதர்வா மற்றும் நிமிஷாவின் நடிப்பு அபாரம். அதிலும் ஒரு வயதான பாட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை சஸ்பென்ஸ் அழகாக கொண்டு சென்றிருக்கிறது. மேலும் படம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் போனதே தெரியாத அளவுக்கு சுவாரசியமாகக் கொண்டு சென்றிருந்தார்.
படத்தில் மைனஸ் சென்று சொன்முதல் பாதி மெதுவாக சென்றது. மேலும் ஐட்டம் பாடல், பார் பாடல் படத்திற்கு சற்றும் தேவை இல்லாதது தான். நிமிஷா நடித்த திவ்யாவின் கதாபாத்திரம் இன்னும் சற்று ஆழமாக கொடுத்திருக்கலாம். மற்றபடி டிஎன்ஏ வென்றது.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5