விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ பாலிவுட்டில் முதல்முறையாக ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். பல வருடங்களாக உருவாகி இந்த படம் சில காரணங்களினால் தடைப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் ஜவான் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் இன்று ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் ரிலீஸ் செய்தியை பகிர்ந்து உள்ளார்.
அண்மையில் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் பிரம்மாண்டமாக வளைகாப்பும் நடந்தது. இதில் தளபதி விஜய்யும் கலந்துகொண்ட அட்லீ மற்றும் பிரியாவை வாழ்த்தி சென்றார். இந்த நாள் இந்த வருடம் இரண்டுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அட்லீ பகிர்ந்துள்ளார்.
முதலாவதாக பிப்ரவரி மாதத்தில் தங்களது குழந்தைக்காக காத்திருப்பதாக அட்லீ கூறியுள்ளார். அடுத்ததாக ஷாருக்கானின் ஜவான் படம் ஜூன் 2 தேதி ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அதற்காக காத்திருப்பதாக அட்லீ பதிவிட்டுள்ளார். இவ்வாறு இந்த வருடம் அட்லீக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
இதை பார்த்தால் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். மேலும் ஷாருக்கானின் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பதான் படத்திற்கு ரிலீஸ்க்கு முன்பே பாலிவுட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஜவான் படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கும் ஜவான் படம் பாலிவுட்டில் அறிமுகப்படம் என்பதால் கோலிவுட் வட்டாரத்தில் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்தனை வருடங்களாக அட்லீ ஒரே படத்தை உருட்டி வந்த நிலையில் ஜவான் படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.