ஜவானுக்கு பின் தயாராகும் அட்லீயின் அடுத்த பாலிவுட் படம்.. விஜய்யை காக்க வைத்து, பின் கொடுத்த அல்வா

அட்லீ இன்னும் ஷாருக்கான் படத்தை முடித்த பாடில்லை. இதோ முடிந்து விட்டது என படத்தை இழுத்துக் கொண்டே போகிறார். இந்தப் படம் துவங்குவதற்கு முன்பே கதாநாயகன் ஷாருக்கான் அட்லீக்கு பல வார்னிங் கொடுத்திருக்கிறார். எப்படியும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் முடித்து கொடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் நாம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று அட்லீக்கு டேட் கொடுத்திருக்கிறார். ஆனால் மாத கணக்கை காத்துக் கொண்டிருந்த காத்துக்கொண்டிருந்த தளபதிக்கு இப்பொழுது அந்த பட வாய்ப்பை வேறொரு டீம்-க்கு கொடுத்து விட்டார். தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற முழு ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் முக்காவாசி படப்பிடிப்பு முடிந்ததால் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டுமே இன்றும் மிச்சம் இருக்கிறது. வரும் ஆயுத பூஜைக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பு தளபதி தன்னுடைய 68 ஆவது படத்தை யார் இயக்குவது என்பதை முடிவெடுத்து விட்டார்.

10 வருடங்களாக காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு தளபதி 68 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருடன் சுதா கொங்கராவும் இந்த படத்தை இணைந்து இயக்குகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருக்கிறது. இவ்வாறு தளபதி 68 படத்தின் முழு டீமும் தயாராகிவிட்டது.

ஆனால் இந்த பட வாய்ப்பு எப்படியும் நம்மை தேடி தான் வர வேண்டும் என அட்லீ மிதக்கத்தில் இருந்தார். ஆனால் விஜய்யும், எப்போது அட்லீ ஜவானை முடித்துவிட்டு வருவார் எனக் காத்துக் கிடந்த நிலையில் டென்ஷன் ஆன தளபதி அந்த பட வாய்ப்பு இப்போது வெங்கட் பிரபு மற்றும் சுதா கொங்கராவிற்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.

இதை கேள்விப்பட்ட அட்லீயும் தற்போது விரட்டியின் உச்சத்தில் இருக்கிறார். இதனால் இனி கோலிவுட்டிற்கு வரவே மாட்டேன் என்று ஜவான் படம் முடிந்த பிறகு ஹிந்தியில் வருண் தவான் வைத்து தெறி படம் ரீமேக் செய்கிறார். ஆனால் இந்த படத்தை வேறு ஒரு டைரக்டர் தான் எடுக்க உள்ளார். அவருக்கு இவர் உதவி செய்கிறார்.