இணையத்தில் கசிந்த அட்லீ, ஷாருக்கான் பட தலைப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை எடுக்க உள்ளார். இதற்கான அறிவிப்புகள் அரசல் புரசலாக வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே முதல் பிரியங்கா சோப்ரா வரை பல நடிகைகளின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் அட்லீ, நயன்தாரா தான் வேண்டும் என அடம்பிடித்து அந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

நயன்தாராவும் அட்லீயுடன் நல்ல நட்பில் இருப்பதால் இந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திர நடிகர்கள் அந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இன்னும் சில தினங்களில் பூனேவில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாம். அதில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்களாம்.

முதலில் இந்த படத்திற்கு சங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வந்த நிலையில் தற்போது ஜவான் என்ற பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடித்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டு மீண்டும் விஜய்யுடன் ஒரு படம் செய்யப் போகிறாராம் அட்லீ.

atlee-shahrukhkhan-cinemapettai
atlee-shahrukhkhan-cinemapettai