எதையும் காதில் வாங்காமல் அட்லி ஆடும் ஆட்டம்.. சின்ன அண்ணன், பெரியண்ணன் ஆசிர்வாதத்தோடு அடிக்கும் மரண அடி

Director Atlee: தமிழில் இயக்கிய ரெண்டு மூன்று படங்களை வைத்து பாலிவுட்டில் களமிறங்கினார் இயக்குனர் அட்லி. இயக்கிய முதல் படமே ஷாருக்கான் வைத்து என்பதால் பல எதிர்பார்ப்புகள் இவர் மீது வைக்கப்பட்டது. அந்த வகையில் ஜவான் படம் இரு தினங்களுக்கு முன் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

அத்துடன் இப்படம் வட இந்தியாவில் செம ஹிட் ஆகி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் ஷாருக்கான் இதற்கு முன்னதாக நடித்த பதான் படத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று பேசி வருகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இயக்குனர் அட்லி மற்றும் ஷாருக்கான் கொடுத்து இருக்கிறார்கள்.

Also read: அட்லியை நம்பி இறங்கிய ஷாருக்கான் தல தப்பினாரா.? ஜவான் முதல் நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

மேலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருவதால் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி ரெண்டே நாளில் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் அட்லி-யின் மவுஸ் எதிர்பார்க்காத அளவிற்கு டபுள் மடங்காக உயர்ந்து இருக்கிறது.

அந்த வகையில் பெரிய தயாரிப்பாளர் கண்ணுக்கு அட்லி தென்பட்டு விட்டார். அதிலும் இந்த அளவுக்கு ஹிட்டானதை பார்த்த பிறகு, உடனே அவரைக் கூப்பிட்டு பேசி இருக்கிறார். அதாவது பாலிவுட்டில் பெரிய தயாரிப்பாளர் கரண் ஜோகர், அட்லியை கூப்பிட்டு என்னுடைய தயாரிப்பில் அடுத்த படத்தை நீங்கள் இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Also read: பெரிய ஓபனிங் இல்லாத ஜவான் படம் .. ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே ஒதுக்கப்படும் ஷாருக்கான்

இவரும் அதற்கான சம்மதத்தை கொடுத்து தலையை ஆட்டிவிட்டார். முக்கியமாக அந்த படத்திலும் மறுபடியும் ஷாருக்கானை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அட்லிக்கு பக்க பலமாக அண்ணன் ஸ்தானத்திலிருந்து விஜய் ஆசீர்வாதம் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.

அதேபோல் இன்னொரு பெரிய அண்ணனாக ஷாருக்கான் கிடைத்திருக்கிறார். இப்படி ரெண்டு அண்ணன்களையும் வைத்து அட்லி தொடர்ந்து ஆட்டம் போட தயாராகி விட்டார். அத்துடன் பாலிவுட்டிலும் அட்லியின் மார்க்கெட் கொடி கட்டி பறந்து வருகிறது. இனிமேல் என்ன நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக முழு நேரமும் பம்பரமாக சுற்ற போகிறார்.

Also read: யாரு சாமி நீ, ஜவான் இத்தனை படங்களின் காப்பியா.? ஷாருக்கான் தலையில் ரெட் சில்லியைஅரைத்த அட்லி