மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்

அண்மை காலமாக தனுஷின் நடை, உடை, பேச்சு எல்லாம் சூப்பர் ஸ்டாரை பிரதிபலிப்பது போன்றே இருக்கிறது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததிலிருந்து அவரிடம் இது போன்ற மாறுதல்கள் இருப்பது உண்மை தான். ஆனால் இப்போதெல்லாம் அவர் மேடையில் பேசும் போது கூட சூப்பர் ஸ்டார் ஸ்டைலையே பின்பற்றி வருகிறார்.

இதை பலரும் கூர்ந்து கவனித்து தான் வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தன்னை அவர் ஒரு ஆன்மீகவாதியாகவும் காட்டிக் கொள்கிறார். இப்படி ரஜினி போன்று அவர் செயல்பட்டாலும் உண்மையான தொழில் பக்தி அவரிடம் கொஞ்சம் கூட இல்லை. ஏனென்றால் அவர் இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா காட்டி வருகிறாராம்.

பொதுவாக நடிகர்கள் பலரும் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கென்று இரண்டு, மூன்று உதவியாளர்களை அழைத்து வருவார்கள். ஆனால் தனுஷ் 14 பேர் படை சூழ படப்பிடிப்புக்கு வருகிறாராம். அவர்கள் தங்குவதற்கான இடம், சாப்பாடு செலவு என மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகிறாராம்.

இதை ஏன் என்று எதிர்த்து கேட்க கூட தயாரிப்பாளர்கள் இப்போது பயப்படுகிறார்கள். ஏனென்றால் பெரிய ஹீரோவாக இருக்கும் அவர் படத்தில் நடிக்க முடியாது என்று கோபித்துக் கொண்டு சென்றால் என்ன செய்வது என்ற பயம் தான். அதனாலேயே பல தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தை அமைதியாகவே கடந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கூட தனுஷ் சில பிரச்சனைகளை செய்திருக்கிறார். அதாவது அப்பட ஷூட்டிங் சமயத்தில் அவர் என்னால் நடந்து போக முடியாது ஆடி கார் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறார். அதன் காரணமாக அவர் கோபித்துக் கொண்டு சென்னை வந்ததால் படப்பிடிப்பே ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இது போன்று இன்னும் பல அட்டூழியங்களை அவர் செய்து வருகிறாராம். இதனால் தயாரிப்பாளர் கதறும் நிலைக்கு சென்றிருக்கிறார். இவ்வாறு பெரிய ஹீரோ என்று பெயரெடுத்து, புகழின் உச்சியில் இருக்கும் இவர் இப்படி நடந்து கொள்ளலாமா என்ற கேள்வியும் இப்போது எழுந்து வருகிறது. மேலும் மாமனார் போல் மேடையில் பேசுவதை விட்டுவிட்டு அவரைப் போன்று தொழில் பக்தியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பேசி வருகின்றனர்.