Actor Rajini: பொதுவாக சினிமாவை பொருத்தவரை எந்த நடிகர்கள் டாப், யார் முன்னிலையில் இருக்கிறார் என்பதை அவர்கள் நடித்து வெளிவரும் படங்களின் வசூலை வைத்து தீர்மானிக்கப்படும். அந்த வகையில் ரஜினி ஒரு காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வசூலில் சாதனை புரிந்ததால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து எத்தனை நடிகர்கள் இவருக்கு பின்னால் வந்திருந்தாலும் அவர்களை ஓரம் கெட்டும் அளவிற்கு ரஜினி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருந்தது. இதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரஜினி என்றாலே அளவு கடந்த மரியாதையும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டது.
அதனால் ரஜினிக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அதற்கு இணையாகவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் ரஜினி என்றால் தனித்துவம் கிடைக்கும். இதற்கிடையில் கொஞ்சம் வருடங்களுக்கு முன் ரஜினிக்கு நிறைய ஃபெயிலியர் ஆன படங்கள் தொடர்ந்து கொண்டே வெளிவந்தது.
இதனால் வசூல் அளவில் இவர் நான்காவது இடத்திற்கு போய்விட்டார். ஆனாலும் இவருடைய இமேஜை கொஞ்சம் கூட குறைய விடாமல் இவருக்கு சப்போர்ட் செய்வது பல பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான். அந்த வகையில் ரஜினியும் வசூலில் பின் தங்கினாலும் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் போராடிக் கொண்டு வருகிறார்.
ரஜினி ஹீரோவாக நடிக்கும் வரை வேறு யாருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்து விடவும் கூடாது, இவரை யாரும் நெருங்கி விடக்கூடாது என்று பல தயாரிப்பாளர்கள் ரஜினிக்கு உதவியாக இருந்து வருகிறார்கள். அதுவும் இவருடைய வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து காலம் காலமாக வசூலை வைத்து தான் யார் முதலிடம் என்று தீர்மானிக்கப்படுவதால், தற்போது இந்த இடத்திற்கு முதலில் இருப்பது விஜய். ஆனாலும் தன்னுடைய பட்டம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று ரஜினி நினைக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி பல பிரபலங்களும் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.