Gv Prakash : கடந்த மாதம் நல்ல நல்ல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சித்தார்தின் 3BHK, சிவா நடிப்பில் வெளியான பறந்து போ ஆகிய படங்கள் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் தலைவன் தலைவி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
பகத் பாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான மாரீசன் படமும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் முதல் வாரம் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், வினோதினி, காளி வெங்கட், ஆஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ஹவுஸ்மேட்ஸ். இந்த படத்திற்கான பிரமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது. ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டு 1ல் வெளியாகும் 7 படங்கள்
அடுத்ததாக யோகி பாபு, அஜ்மல், உதயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது அக்யூஸ்ட் படம். ஒரு குற்ற பின்னணியை கொண்ட இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் புழல் சிறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக விஜயசேகரன் இயக்கிய நடித்திருக்கும் படம் தான் போகி. இந்த படத்தில் நம்பி நந்தி, சுவாசிகா மற்றும் பலர் நடித்துள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிளாக்மெயில் படம் இதே நாளில் வெளியாகிறது.
இதில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷுக்கு இந்த படம் ஹிட் கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது முதல் பக்கம் படம்.
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன், முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், சுஜித் சங்கர் ஆகியோர் நடிப்பில் சரண்டர் படம் உருவாகி இருக்கிறது. அசுரன் பட நடிகரான டிஜே அருணாச்சலம் கதாநாயகனாக நடித்திருக்கும் உசுரே படமும் இதே நாளில் வெளியாகிறது.