கூலி முதல் ரிவால்வர் ரீட்டா வரை.. ஆகஸ்ட் மாதம் திரை தீ பிடிக்க வரும் 20 படங்கள்

இந்த ஆகஸ்ட் மாதம், தமிழ் ரசிகர்களுக்காக ஒரு பெரும் சினிமா விழா போலவே அமைகிறது. மொத்தம் 20 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ரிலீஸ் தேதிகளோடு சிறப்பான படங்களின் பட்டியல் இதோ.

ஆகஸ்ட் 1-ந் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. யோகி பாபு, உதயா நடித்த அக்யூஸ்ட், புதுமுகங்கள் நடித்துள்ள போகி, ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில், தர்ஷன் நடித்த ஹவுஸ்மேட்ஸ், கதிர் நடித்த மீஷா படங்கள் வெளிவர உள்ளது.

அதேநாளில், விஜய் டிவி புகழ் கதையின் மிஸ்டர் ஜூ கீப்பர், வெற்றி நடித்த முதல் பக்கம், பிக் பாஸ் தர்ஷன் நடித்த சரண்டர், டிஜே-ஜனனி நடித்த உசுரே, மேலும் தனுஷின் ராஞ்சனா படம் மீண்டும் ரிலீஸாகும்.

ஆகஸ்ட் 8-ந் தேதி: Red Flower என்ற ஒரே ஒரு தமிழ் படம் வெளியாகிறது. இதைத் தவிர, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ரிலீஸ்கள் நடப்பது 14ஆம் தேதி ரஜினியின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன், Jr. NTR நடிப்பில் உருவான பான் இந்தியா படம் வார் 2 ரிலீசாகின்றன.

ஆகஸ்ட் 22-ந் தேதி: இந்திரா மற்றும் சொட்ட சொட்ட நனையுது ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன. வசந்த் ரவியின் இந்திரா கலை மற்றும் காதல் கலந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொட்ட சொட்ட நனையுது வில் நிஷாந்த் ரூசோ மற்றும் ரோபோ சங்கர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 27-ந் தேதி மூன்று படங்கள் ரிலீசாகின்றன. ஜிவி பிரகாஷின் அடங்காதே, விஜய் கவுரீஷின் கடுக்கா, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா ஆகியவை அன்றைய முக்கிய ரிலீஸ்கள். இதில் ரிவால்வர் ரீட்டா ஒரு வலுவான ஹீரோயின் கதையாக அமையும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ந் தேதி மூன்று படங்கள் ரிலீசாகின்றன. அதர்வா நடித்த தணல், ஷான் நிகம் நடித்த பல்டி, மற்றும் குற்றம் புதிது ஆகியவை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.