3 நாளில் பட்ஜெட்டில் பாதியை தட்டித் தூக்கிய அவதார் 2.. வசூல் வேட்டையில் மிரள விட்ட ப்ளூ மேஜிக்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியான அவதார் 2 திரைப்படம் தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் கோடிக்கணக்கில் வசூல் லாபம் பார்த்து உலக சினிமாவையே மிரள வைத்தது. தற்போது 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கும் இந்த இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த நீல நிற மனிதர்களின் ப்ளூ மேஜிக் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதனாலேயே இந்த திரைப்படத்தை பார்க்க உலகம் முழுவதிலும் உள்ள ஆடியன்ஸ் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 140 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த படம் பல மடங்கு லாபம் பார்த்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இப்படம் போட்ட பட்ஜெட்டை இன்னும் சில நாட்களிலேயே எடுத்து விடும் என்று தெரிகிறது. ஏனென்றால் படம் வெளியான இந்த மூன்று நாட்களில் அவதார் 2 கிட்டத்தட்ட 3500 கோடி வரை வசூலித்து இருக்கிறது.

அந்த வகையில் இப்படம் 7500 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேற்பட்ட கலெக்சனை இப்படம் வெறும் மூன்றே நாட்களில் தட்டி தூக்கி இருக்கிறது. இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் கொஞ்சம் கூட குறையாமல் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அது மட்டுமல்லாமல் இப்போது கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்ற விடுமுறை நாட்களும் அடுத்தடுத்து வர இருப்பதால் படத்திற்கு அதுவும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அதனாலேயே இயக்குனர் சரியான நாட்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை வெளியிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே இப்போது படம் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வருகிறது.

இந்த அளவுக்கு இப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் படத்தின் விஷுவல் காட்சிகள் தான். மேலும் இப்படம் ரசிகர்களை முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது. படம் முடிந்த பிறகும் கூட அதன் தாக்கம் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பதே நிதர்சனம். அந்த வகையில் ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.