2020ல் நடிப்பில் வெளுத்து வாங்கிய நடிகர்கள்.. விருதுகளை அள்ளி குவித்த பிரபலங்களின் லிஸ்ட்

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த வருடத்திற்கான பேரமைப்பின் சார்பில் சிறந்த நடிகர், நடிகை, காமெடியன், பாடலாசிரியர், திரைக்கதை, இயக்குனர் போன்ற பல்வேறு துறைகளில், அந்த ஆண்டின் அனைத்து திரைப்படங்களையும் பார்வையிட்டு சிறப்பாக செயலாற்றிய அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமான ஒன்றாகும்

தற்போது 45-வது கேரளா ஃபிலிம் கிரிடீஸ் அவார்டு (Kerala Film Critics Awards) 2020 ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்றவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில், இந்த வருட கேரளா ஃபிலிம் கிரிடீஸ் அவார்டு ‘தே கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. சிறந்த நடிகராக பிரித்திவிராஜ் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை பிஜே மேனன்  வாங்கியுள்ளனர். அது மட்டுமின்றி, சிறந்த இயக்குனருக்கான விருதினை பேபி என்ற இயக்குனருக்கு கொடுத்துள்ளனர்.

தமிழில் பிரித்திவிராஜ் மொழி, சத்தம் போடாதே போன்ற படங்களை நடித்ததன் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ஆனார். தற்போது கேரளாவில் கொரோனா பரவல்கள்  அதிகமாக இருக்கும் காரணத்தினால் விருது வழங்கும் விழாவினை தொடங்கவில்லை, கேரளத்தில் தளர்வுகள் குறைந்ததும் இந்த Kerala Film Critics Awards 2020 பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். விருதுகளை பெற்றவர்களின் பட்டியல்:

சிறந்த நடிகர் – ப்ருத்விராஜ், பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்), சிறந்த நடிகை – சுரபி லட்சுமி (ஜுவாலாமுகி), சம்யுக்தா மேனன் (ஆணும் பெண்ணும், வுல்ஃப், வெல்லம்), சிறந்த துணை நடிகர் – சுதீஷ் (என்னிவர்) , சிறந்த துணை நடிகை – மமிதா பைஜு (கோ கோ)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – மாஸ்டர் சித்தார்த் (பூனமி), சிறந்த படம் – தி கிரேட் இந்தியன் கிச்சன், சிறந்த டைரக்டர் – சித்தார்த் சிவா (படம் – என்னிவர்), சிறந்த கதை எழுத்தாளர் – எம்.ஜெயச்சந்திரன் (சுஃபியும் சுஜாதையும்), சிறந்த ஒளிப்பதிவாளர் – அமல் நீரத் (Trance), சிறந்த திரைக்கதை – Sachi (அய்யப்பனும் கோஷியும்)
Ruby Jubilee Award – ஹரிகுமார், சிறந்த சவுண்ட் டிசைனர் – ரசூல் பூக்குட்டி

Kerala Film Critics Awards
Kerala Film Critics Awards

எனவே விருது பெற்ற அனைவருக்கும் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.