ஆனந்தராஜுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா.? முக்கிய ரகசியத்தை உடைத்த பயில்வான்

Anandhraj-Bailvan Ranganathan: பத்திரிக்கையாளர், நடிகர் என்ற முகங்கள் இருந்தாலும் பயில்வானை பொருத்தவரை யூடியூப் தான் அவரை இப்போது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதை அவரே பலமுறை சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு இவர் திரை பிரபலங்கள் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை தைரியமாக சொல்லி வருகிறார்.

இதில் பல சர்ச்சைகள் அவரை நோக்கி திரும்பி இருக்கிறது. ஆனாலும் அவர் தன் வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறார். அப்படித்தான் தற்போது நடிகர் ஆனந்தராஜ் பற்றிய முக்கிய ரகசியம் ஒன்றை பயில்வான் வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் டெரர் வில்லனாக மிரட்டிய இவர் தற்போது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாக நடிகர்களை பற்றி ஏதாவது சர்ச்சை செய்திகள் வெளிவரும். ஆனால் ஆனந்தராஜ் பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் வெளிவந்தது கிடையாது.

ஏனென்றால் இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அதேபோன்று இவருக்கு தண்ணி அடிப்பது போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியிலும் இருந்திருக்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அவருடைய கட்சி சார்பாக இவர் போட்டியிட்டு இருக்கிறார். ஆனால் வெற்றி பெறவில்லை.

இப்படி பல முகங்கள் கொண்ட இவர் பற்றிய மற்றொரு ரகசியமும் இருக்கிறது. அதாவது சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ஆனந்தராஜ் தலையில் முடி கிடையாதாம். விக் வைத்து தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். வருட கணக்கில் பார்த்து வருவதால் ரசிகர்களுக்கும் இந்த முகமே பழகிவிட்டது என பயில்வான் ஒரு வீடியோவில் கூறி இருக்கிறார்.