ஆதாரத்தோடு அந்த 2 படத்தை ஜெயிலரோடு ஒப்பிட்ட பயில்வான்.. அட ஆமாங்க வெளிவந்த நெல்சனின் தில்லாலங்கடி வேலை

இன்று காலை முதலே ஜெயிலர் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. இரண்டு வருடங்களாக ரஜினியின் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் நெல்சன் தரமான படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். அதன்படி ரஜினி ரசிகர்களை ஜெயிலர் படம் திருப்தி படுத்தியதாகத்தான் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் படத்தில் சில நெகட்டிவ் விஷயங்களும் இருப்பதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். அதாவது திகார் ஜெயிலில் ஜெயிலராக இருக்கும் ரஜினி கொடூர வில்லன்களாக உள்ள ஜாக்கி ஷெரஃப், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரை நல்லவராக மாற்றுகிறார்.

Also Read : அலப்பறையை ஆரம்பித்த தலைவர், நெல்சன் தல தப்புமா.? அனல் பறக்கும் ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்

இவர்கள் மூவரும் ஜெயிலை விட்டு விடுதலையாகும் போது நல்ல மனிதர்களாக தங்களது ஊருக்கு செல்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஜெயிலரில் இருந்து ஓய்வு பெற்ற ரஜினி தனது மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதிலும் கண்ணாலே பேசும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அபாரமாக இருக்கிறது.

இந்நிலையில் ரஜினியின் மகனான வசந்த ரவி போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு சிலை கடத்தல் விவகாரத்தில் வசந்த் ரவி நுழையும் போது பல பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனால் வசந்த் ரவி கடத்தப்பட்டு காணாமல் போய்விடுகிறார். அதுவரை ரஜினியை பவ்வியமாக பார்த்த நிலையில் அதன் பிறகு ரணகளமாக மாறுகிறார்.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!

அப்போது மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர்களை ரஜினி மீண்டும் அழைத்து இந்த பிரச்சனையை சரி கட்டுகிறார். மொத்தத்தில் இந்த படத்தைப் பார்க்கும்போது பாட்ஷா படத்தின் பாதி, தங்கபதக்கத்தின் மீதி போல் தான் தெரிவதாக பயில்வான் கமெண்ட் கொடுத்திருக்கிறார். பாட்ஷா படத்தில் தன்னை அடித்தாலும் அமைதியாக இருந்த ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் பொங்கி எழுவார்.

மேலும் தங்கப்பதக்கம் படத்தில் தனது மகன் கெட்டவன் என்று தெரிந்தவுடன் ஆர் பி சவுத்ரி எப்படி சுட்டுக் கொள்வாரோ அதேபோல் கிளைமாக்ஸ் தான் ஜெயிலர் படத்திலும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தில் கமல் தனது மகனை கொன்றதால் பழி வாங்குவார். அதேபோல் தான் இப்படத்திலும் உள்ளது.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!

நெல்சன் புதிதாக எதுவும் ஜெயிலர் படத்தில் யோசிக்கவில்லை. மேலும் இப்படத்தில் பாடல்கள் எதுவும் பிடிக்கவில்லை ஆனால் பின்னணி இசை நன்றாக அனிருத் அமைத்துள்ளார். தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களுக்கு ஜெயிலர் பரவாயில்ல என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் ரஜினியை மொத்தமாக டேமேஜ் செய்துள்ளார் நெல்சன் என அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் பயில்வான்.