ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்த பாலா.. சம்பளத்தை அப்படியே கொடுத்து தூக்கி விட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் இயக்குனர் பாலா. இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் எதார்த்தமான நடிப்புடன் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொண்டிருக்கும். முக்கியமாக இவரது படங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு ஒரு நேரம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இருந்திருக்கிறார்.

அதாவது இவர் இயக்குனராக அறிமுகமாகிய சேது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரால் சமாளிக்க முடியாமல் படத்தை எடுப்பதை நிறுத்தி விட்டார். கொஞ்சம் காலங்கள் ஆனதும் மீண்டும் இயக்கலாம் என்று முடிவு செய்து இப்படத்திற்கு கதாநாயகனாக விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

அப்பொழுது விக்ரமும் எத்தனையோ படங்களில் நடித்தும் எந்தவித அங்கீகாரமும் இல்லை என்று விரக்தியில் நல்ல கதைக்காக பல வருடம் காத்திருந்தார். அந்த நேரத்தில் விக்ரமுக்கு கிடைத்த வாய்ப்பு தான் சேது. ஏற்கனவே இவருக்கும் சினிமாவில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்திருக்கிறார். அதனால் ராதிகாவிடம் உங்கள் சீரியலில் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் பாலா இந்த படத்தில் கதையை விக்ரம் இடம் சொல்லி இருக்கிறார்.

உடனே விக்ரம் ராதிகாவிடம் போய் எனக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடைசி சான்ஸ் ஆக இந்த படத்தில் நடித்துவிட்டு வருகிறேன். இதன் மூலம் எனக்கு வெற்றி கிடைத்தால் என்னுடைய பயணம் சினிமாவில் தொடரும். இல்லை என்றால் நான் மறுபடியும் உங்களுடன் சேர்ந்து நாடகத்தில் நடிக்க வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு பாலா படத்தில் நடிக்க போய்விட்டார்.

அதே மாதிரி படமும் தொடங்கியது ஆனால் திடீரென்று பல பிரச்சினையால் படம் நிறுத்தப்பட்டு விட்டது. பல மாதம் ஆகியும் படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதனால் இனிமேல் இதற்காக காத்திருப்பது பிரயோஜனம் இல்லை என்று நினைத்து ராதிகாவிடம் சீரியலுக்கு நடிக்க சென்று விட்டார். அப்பொழுது சீரியலில் நடிப்பதற்காக ராதிகாவிடம் 60,000 சம்பளத்தை வாங்கி இருக்கிறார். அதன் பின் சீரியலில் நடிக்க தொடங்கும் நேரத்தில் பாலா படத்தை ஆரம்பித்துவிட்டார். மீண்டும் விக்ரம் ராதிகாவிடம் சொல்லிவிட்டு பாலா படத்தில் நடிக்க சென்று விட்டார்.

அப்பொழுது பாலாவுக்கு சம்பளமும் அந்த அளவுக்கு இல்லாததால் வறுமையில் இருந்திருக்கிறார். இதை பார்த்த விக்ரம் ராதிகா விடம் வாங்கிய சம்பளத்தில் இருந்து பாலாவிற்கு 30,000 கொடுத்து அத்துடன் உற்சாகமும் படுத்திருக்கிறார். அந்த அளவிற்கு இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக வாழ்க்கையை தொடங்கினார்கள்.