இறுதி சடங்கை செய்ய விடாமல் கொடுமைப்படுத்திய பாலா.. வெறுத்து போய் சாபம் கொடுத்த தயாரிப்பாளர்

இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வார் என்று திரையுலகில் பலருக்கும் தெரியும். தான் எதிர்பார்த்த காட்சி வரும் வரையில் நடிகர், நடிகைகளை ஈவு இரக்கம் இல்லாமல் படுத்தி எடுத்து விடுவார். அப்படி இவரால் படாத பாடுபட்ட தயாரிப்பாளர் ஒருவர் தற்போது இவருக்கு கண்டபடி சாபம் விட்டுள்ளார்.

பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்தவர் தான் அழகன் தமிழ்மணி. இவர் மலையூர் மம்பட்டியான் உட்பட சில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடிக்க இவரிடம் கேட்டபோது இவர் எனக்கு நடிப்பு வராது என்று எவ்வளவோ சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் பாலா இவரை கட்டாயப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். வேறு வழி இல்லாமல் நடிக்க வந்த இவரை பாலா சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் இவருக்கு நடிப்பு வராத நிலையில் பாலா ரொம்பவும் கடுமையாக நடந்து இருக்கிறார். இதையெல்லாம் தாண்டி ஒரு இரக்கம் இல்லாத விஷயத்தையும் பாலா செய்திருக்கிறார்.

அதாவது அந்த தயாரிப்பாளரின் பெற்றோர் இறந்த சமயத்தில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக அவர் பாலாவிடம் மொட்டை போட வேண்டும், தாடி எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஏனென்றால் அந்த படத்தில் அவர் அந்த கெட்டப்பில் தான் வருவார். ஆனால் அதை கேட்ட பாலா இந்த படம் இதுவரை மூன்று வருடம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் மொட்டை அடித்தால் இன்னும் மூன்று வருடம் ஆகும்.

இதற்கு சம்மதம் என்றால் நீங்கள் மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அவரும் ஒரு தயாரிப்பாளர் என்ற காரணத்தால் தன்னால் படத்திற்கு எந்த தாமதமும் வந்து விடக்கூடாது என்று நினைத்த அழகன் தமிழ்மணி மொட்டை அடிக்காமலேயே இறுதி சடங்கை செய்திருக்கிறார். ஆனால் அவர் பாலாவால் தன்னுடைய கடமையை செய்ய தவறியதால் மிகவும் நொந்து போயிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பாலாவை நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போயிடுவ என்று வயிறு எரிந்து சாபம் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிகழ்வைப் பற்றி கூறியிருக்கும் அந்த தயாரிப்பாளர் என்னுடைய சாபம் தான் அவரை நிம்மதி இல்லாமல் வாழ வைத்து விட்டது. அதனால் தான் அவர் ஒரு படம் கூட ஒழுங்கா எடுக்க முடியவில்லை. மனைவியோடு சேர்ந்து வாழ முடியவில்லை. தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாலா இன்னும் மோசமாக கஷ்டப்படுவார் என்று அவர் காட்டத்துடன் தெரிவித்து இருக்கிறார்.