தேசிய விருதுக்கான எல்லா தகுதியும் உடைய வெகுளி நடிகர்.. கொண்டாடப்படாமல் போன பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு

K.Balachandar: கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் இந்த நடிகர் எல்லா கேரக்டரும் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு. தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பால் பலமுறை இவர் நம்மை வியக்க வைத்திருக்கிறார். ஆனால் அதற்கான அங்கீகாரம் தான் இவருக்கு சரியாக கிடைக்கவில்லை.

ஒரு காமெடியனாக அறிமுகமான இவர் தற்போது குணச்சித்திர நடிகராக ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். சிறந்த நகைச்சுவை நடிகருக்காக இவர் பல விருதுகள் வாங்கி இருந்தாலும் தேசிய விருது மட்டும் இவருக்கு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அந்த விருதுக்கான 10 பொருத்தமும் இவரிடம் பக்காவாக இருக்கிறது.

அப்படிப்பட்ட நடிகர் தான் சார்லி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு நண்பராக இவர் நடித்து இருக்கிறார். தற்போது அப்பா கதாபாத்திரங்களில் உணர்ச்சிகரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் இறைவன், ஜோ, எறும்பு உள்ளிட்ட படங்கள் வெளிவந்திருக்கிறது.

Also read: விஜய் இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் 3 இயக்குனர்கள்.. பல கோடி கொடுத்தாலும் தளபதி கிட்ட வேலைக்கு ஆகாது

ஆனால் காண்ட்ராக்டர் நேசமணியை பாடாய்படுத்திய கோவாலுவை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நேசமணியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நாம் கோவாலுவை மறந்தது ஏனோ தெரியவில்லை.

அதேபோல் வெற்றி கொடி கட்டு படத்தில் பணத்தை பறிகொடுத்து விட்டு மனநிலை பாதிக்கப்பட்டவராக ஒரு காட்சியில் நடித்து நம்மையெல்லாம் கலங்க வைத்திருப்பார். இப்படி இவருடைய நடிப்புக்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்த சார்லி கே பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தில் தான் அறிமுகமானார். அப்படம் வெளிவருவதற்கு முன்பே லாட்டரி டிக்கெட், அண்ணே அண்ணே போன்ற படங்கள் வெளிவந்து இவருக்கான அடையாளத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட மாபெரும் நடிகருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் தான்.

Also read: விஜய், விஷாலின் பதவி ஆசை.. சூப்பர் ஸ்டார் கொடுத்த நெத்தியடி பதில்