Bayilvaan Ranganathan : சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப்பில் தான் பல நடிகர் நடிகைகளை பற்றி அந்தரங்க விஷயங்களை கூறி வந்தார். ஆனால் இப்போது ஒரு படத்தின் விழா மேடையிலேயே கதாநாயகனை பற்றி அவர் முன்னிலையில் ஒரு செய்தி கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகனாக நடித்தவர் தான் ஜெய் ஆகாஷ். படங்களில் வாய்ப்பு குறையவே சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு தொடர்களிலும் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். இந்த சூழலில் வெள்ளிதிரையில் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்ற முடிவில் அவரே இயக்கி ஜெய் விஜயம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் பயில்வான் கலந்து கொண்டார்.
அப்போது விழா மேடையில் பேசிய பயில்வான், ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்த வரும்போது ஒரு கிசுகிசு தான் வெளியிட்டேன். இவரும் லண்டனில் இருந்து வரும்போது மற்றொரு பெண்ணும் லண்டனில் இருந்து வந்திருந்தார். இருவரும் காதலித்தனர் ஆனால் அந்தப் பெண் வேறு ஒரு பிரபல ஹீரோவை திருமணம் செய்து கொண்டார்.
இதை சொன்னவுடன் ஜெய் ஆகாஷ் உடனடியாகவே பயில்வான் அருகில் வந்து இது பொய்யான தகவல் என்று கூறினார். எல்லோரும் இதே போல் தான் நினைக்கிறார்கள் அதில் உண்மை இல்லை என்று ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார். அதாவது சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் பிரபுதேவா போல ஆக வேண்டும் என்பதற்காக சென்னை வந்தேன். அந்த வீடியோ இப்போது இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.