Actor Vadivelu: வடிவேலுவை பற்றி சமீபகாலமாக நிறைய செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது தன்னுடன் இருக்கும் சக நடிகர்களை வளர விடாமல் தான் மட்டுமே வளர வேண்டும் என்று நினைக்க கூடியவர். மேலும் அவர் சினிமாவில் வளர்ச்சி அடைந்தவுடன் ஆணவம் சேர்ந்து விட்டது.
பிரபல இயக்குனர்களை கூட மதிக்காமல் செயல்பட்டு வருகிறார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். அதுமட்டுமின்றி அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.
சினிமா விமர்சகர் பயில்வான் தனது யூடியூப் சேனலில் வடிவேலு பற்றி பேசியிருக்கிறார். அதாவது வடிவேலுக்கு ரெட் கார்டு தடை போடவில்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தனர். இப்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபல இயக்குனர் பி வாசுவை வடிவேலு பாடாய்படுத்தி வருகிறார். இந்த சூழலில் பாதி காட்சிகள் வடிவேலு இல்லாமல் பி வாசு எடுத்திருக்கிறார். அதுமட்டும்இன்றி வடிவேலு ஆரம்பத்தில் தன்னுடன் வைத்திருந்த கூட்டணியை அப்படியே கழட்டி விட்டுள்ளார். நாய் சேகர் படத்தில் கூட ரெட்டி கிங்ஸ்லி போன்ற புதிய நடிகர்களை இறக்கினார்.
அதனால் தான் படம் படு தோல்வியை சந்தித்தது. இது ஒருபுறம் இருக்க இப்போது உதயநிதி சினிமாவில் தன்னுடைய கடைசி படம் மாமன்னன் என்று அறிவித்துள்ளார். முதல்முறையாக வடிவேலு உடன் இந்த படத்தில் கூட்டணி போட்டிருக்கிறார். ஆனால் மாமன்னன் படம் படுதோல்வி அடைய உள்ளது.
இதற்கு காரணம் வடிவேலு மட்டுமே. ஒருவேளை படம் வெற்றியடைந்தால் அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதியாக இருக்கக்கூடும். மற்றபடி வடிவேலுவின் நடவடிக்கை மற்றும் குணம் யாருக்குமே இப்போது பிடிக்கவில்லை. அவருடைய சினிமா கேரியரே முடியும் நேரம் இது என பயில்வான் பகீர் கிளப்பி உள்ளார்.