தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் குணச்சித்திர வில்லனாக கலக்கியவர் தான் பயில்வான். அப்போது இவரது உடம்பை பார்த்து பலரும் பிரமித்துப் போயினர். அந்த அளவிற்கு உடல் மீது கவனம் செலுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.
அப்போதெல்லாம் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்திற்கு அனைத்து இயக்குனர்களும் தேடுவார்கள். அந்த அளவிற்கு அப்போது பயில்வான் மிகவும் பிரபலமாக இருந்தார்.
ஒருமுறை பயில்வானிடம் உடல் கட்டமைப்பு எப்படி இத்தனை வருடமாக காப்பாற்றி வருகிறீர்கள் என கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளது என்ன தெரியுமா ?

அதாவது பயில்வான் சூரியன் எழுவதற்கு முன்னாலேயே எழுந்து நடைபயிற்சி செய்து விடுவாராம். அவர் வீட்டில் வேலை செய்யாமல் இருந்தாலும் தன்னைத்தானே ஒரு பிசி மனிதனாக வைத்துக் கொள்வாராம். அதாவது ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பாராம்.
40 வயதுவரை எப்போதும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று விடுவாராம். தற்போது வயது அதிகமாகி விட்டதால் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொண்டுள்ளாராம்.
முன்னாடியெல்லாம் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு சென்றால் சப்ளையர் சார் முன்னாடியே சொல்லி விடுங்கள் அப்பத்தான் கொண்டு வர முடியும் என்ற அளவிற்கு சாப்பிடுவாராம்.
தற்போது 10 வருடங்களாக அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொண்டுள்ளேன் எனவும் அது மட்டும் இல்லாமல் ஒரு நாளைக்கு 20 முட்டை என தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தனது உடல் மீது அதிக ஆர்வம் வைத்திருந்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்.