விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லரை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ள அதே சமயத்தில் இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்ட காட்சிகள் ஏற்கனவே நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவான கூர்கா திரைப்படத்தின் காட்சிகளாக அமைந்துள்ளது, என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த சமயத்தில் பீஸ்ட்டின் கதை களம் குறித்து இத்திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஹீ இஸ் தி ஃபீரிக்கிங் பீஸ்ட் எனும் செல்வராகவனின் வசனங்கள் ட்ரெய்லரில் தெறிக்கவிட்டிருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகளும் ஜெட் விமானத்தை விஜய் இயக்கும் காட்சிகளும் இப்படத்தின் ட்ரெய்லரில் மாசாக அமைந்துள்ளது.
நெல்சன் திலீப் குமாரின் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மற்ற திரைப்படங்களை போலவே பீஸ்ட் படத்திலும் மாலில் பொதுமக்களை கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப் போராடும் வீரராகவனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்தக் கதைக்களம் ஏற்கனவே நடிகர் யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்படத்தில் பணியாற்றிய அசிஸ்டன்ட் மற்றும் அசோசியேட் டைரக்டர்கள் இது குறித்து பேசி உள்ளனர்.
நடிகர் விஜய்யின் கடந்த சில படங்களில் ஆக்ஷன், மாஸ் அதிகமாக இருந்த நிலையில், இத்திரைப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் ஸ்கிரீன் மேஜிக் உள்ளது என்றும் அந்த மேஜிக்கை பயன்படுத்தி விஜய்யின் பீஸ்ட் ஆக மட்டுமே அமையும் என்று தெரிவித்துள்ளனர். ட்ரெய்லரில் வேண்டுமானாலும் கூர்க்கா படக்காட்சிகளைப் போல அமைந்து இருக்கலாம், ஆனால் படத்தை பார்க்கும்போது இத்திரைப்படம் அப்படி இருக்காது என நெல்சன் தரப்பில் இருந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு கதையை சொல்லி, அந்த கேரக்டரே படத்தை எடுத்து கொண்டு போகும் அளவிற்கு கதைக்களத்தை அமைப்பவர் தான் நெல்சன் திலீப்குமார். ஆகவே இது கண்டிப்பாக நெல்சன் திலீப்குமார் ஸ்பெஷல் வித் விஜய் ஃபார்முலா படமாக பீஸ்ட் திரைப்படம் அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களே பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.