ஆல் ரவுண்டர் பாக்யராஜ் ஹிட் கொடுத்த படங்கள்.. இதுவரை செய்த சம்பவங்கள் தெரியுமா?

Bhagyaraj : முதலில் பாக்கியராஜ் அவர்களே எப்படி அறிமுகப்படுத்துவது என்பது தெரியவில்லை. ஏனென்றால் அன்றைய சினிமா துறையில் அனைத்து கலைகளிளுமே கைதேர்ந்த ஒரு நபர் என்றால் அவர் பாக்கியராஜ் அவர்கள் மட்டும்தான்.

ஆமாம் பாக்யராஜ் அவர்களுக்கு திரையுலகத்தில் தெரியாத கலைகளே கிடையாது என்றே கூறலாம். இவர் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என அத்துனை திரையிலும் கலக்கி கொண்டிருந்த பாக்யராஜை பற்றி எப்படி அறிமுகம் செய்வது என்ற குழப்பம் தான்.

பாக்யராஜ் இதுவரை செய்த சம்பவங்கள்..

இன்று ஆல் ரவுண்டர் என்று சொல்லி கொள்ளும் நிறைய பன்முகம் கொண்ட நடிகர்களுக்கு முன் உதாரணமாக விளங்கியவர்தான் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் மற்றும் 16 வயதினிலே படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.வில்லனாக அறிமுகமான பாக்யராஜை சினிமாவில் கதாநாயகனாகியது பாரதிராஜா.

இவர் தமிழில் மொத்தம் 24 படங்களை இயக்கியுள்ளார் கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது. முந்தானை முடிச்சு, சின்ன வீடு ராசுகுட்டி, தாவணி கனவுகள், டார்லிங் டார்லிங் டார்லிங், தூரல் நின்னு போச்சு இந்த படங்கள் அனைத்துமே பெரும் ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.

இவர் இசை அமைப்பாளராகவும் ஜொலித்துள்ளார். இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், சுந்தரகாண்டம் இதுபோல ஆறு படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்துள்ளார். பாடகராகவும் இவரே இசையமைத்து பாடல்களும் பாடியுள்ளார். பச்சைமலை சாமி பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.

ஆல் ரவுண்டர் பாக்யராஜ்..

அது மட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் நடிப்பின் அரக்கி ஊர்வசி அவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். நகைச்சுவைக்கு பேர் போன கோவை சரளா அவர்களையும் இவர்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அன்றே இத்தனை திறமைகளையும் வெளிக்காட்டி ஒரு ஆல் ரவுண்டராக தமிழ் திரையுலகத்தை வலம் வந்துள்ளார் பாக்யராஜ். அப்போதுள்ள சினிமாளவில் இதுபோல பல தரமான சம்பத்தை பணியிருக்கிறார் நம் தலைவர்