எனக்கும் நாலு காதலி உண்டு, ஓப்பனாக பேசிய பாரதிராஜா.. மாடர்ன் லவ்னா இப்படி இருக்கணும்

இயக்குனர் இமயம் பாரதிராஜா மண் மணம் மாறாத கிராமத்து கதைகளை எடுக்கக் கூடியவர். அவருடைய படங்களில் முன்னுக்குப் பின் முரணாக எந்த விஷயங்களையும் வைக்க மாட்டார். மேலும் கிராமங்களில் எப்படி காதல் இருக்கிறது என்பதை அவரது படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இப்போது அவரே மாடர்ன் லவ் என்ற ஆந்தலாஜி தொடரை இயக்கியுள்ளார். அதாவது ஆறு ஆந்தாலஜி தொடராக மாடல் லவ் சென்னை உருவாகியுள்ளது. இந்தத் தொடர் ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது தமிழில் உருவாகியுள்ளது. மேலும் வருகின்ற மே 18ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

Also Read : மலையாள நடிகைகளை உஷார் செய்த 5 நடிகர்கள்.. பாரதிராஜா வீட்டிற்கு மருமகளான கேரளத்து பைங்கிளி

இதில் நினைவோ ஒரு பறவை என்ற படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அதேபோல் பறவைக் கூட்டில் வாழும் மான்கள் என்ற படத்தை பாரதிராஜா இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே இளையராஜா தான் இசையமைத்துள்ளார். ஆரண்ய காண்டம் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் தியாகராஜன் குமாரராஜா.

இந்நிலையில் பாரதிராஜா இந்த தொடரின் விழாவில் பேசிய போது தியாகராஜன் குமாரராஜாவை பார்த்து தான் வியந்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு வித்தியாசமான மனுஷன் என்றும், ஆரவாரம் இல்லாமல் அழகான காதல் கதைகளை சொல்லக்கூடியவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என பாரதிராஜா கூறியுள்ளார்.

Also Read : ஐந்து ரூபாய்க்கு நடிக்க வந்த டாப் நடிகர், ஆணவத்தில் ஆடிய கமல்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பாரதிராஜா

மேலும் தனக்கு இப்போது 84 வயதானாலும் இதுவரை காதல் செய்வதாக கூறியுள்ளார். மாடல் லவ்வை போல தனது வாழ்க்கையிலும் நிறைய காதலி உள்ளதாக கூறி உள்ளார். அதாவது தான் ஒன்பதாவது படிக்கும்போது முதல்முறையாக காதல் செய்தேன் என்றும், அதன் பிறகு சென்னை வந்ததற்கு பிறகு மற்றொரு காதல் மலர்ந்தது.

அப்படி காலம் மாற்றத்திற்கு ஏற்ப இதுவரை நான்கு காதல் செய்துள்ளேன் என வெளிப்படையாக பாரதிராஜா கூறியுள்ளார். இவ்வாறு வாழ்க்கையில் ஒரே காதல் என்று பல படங்கள் வந்துள்ள நிலையில் பாரதிராஜா இவ்வாறு நான்கு முறை காதல் செய்துள்ளேன் என்று கூறிய விஷயம் வியப்பாக இருக்கிறது.

Also Read : மனோபாலா-வை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய நடிகர்.. இயக்குனராக வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா