நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி வருகிறார்கள். அதில் பழைய இயக்குனர்களும் இயக்கி வருகிறார்கள். குறிப்பாக 80, 90களில் பல ஹிட் படங்களை படங்களை கொடுத்த மணிரத்னம், தற்போது இருக்கும் இளம் இயக்குனர்களுக்கு எல்லாம் சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்று கதை அம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களாக எடுத்து, அதிலும் வெற்றி கண்டார்.
இதனால் சினிமா திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய மணிரத்தினத்தை பார்த்து பாரதிராஜா, ‘நாம் எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறோம்’ என்று அவருக்கும் ஆர்வம் ஏற்பட்ட படம் இயக்க இருக்கிறாராம்.
சமீபகாலமாக சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பாரதிராஜா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர்.
எனவே இயக்குனர் இமயம் என போற்றப்படும் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதை கொஞ்ச காலமாக தவிர்த்து வரும் பாரதிராஜா, இப்போது மணிரத்னத்தை பார்த்து ஒரு படத்தை இயக்கி விட்டு தான் நான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று ஆர்வத்துடன் இருக்கிறாராம்.
படத்தை இயக்குவது உறுதியாகி வேலை நடைபெறுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா, தற்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருக்கிறார்.
இருந்தபோதிலும் வயது மூப்பு காரணமாக அவரின் இத்தகைய ஆசைக்கு இவருக்கு உறுதுணையாக வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வேறு இளம் இயக்குனர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். இசை இளையராஜா வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மகள் பவதாரணி இசை அமைக்கிறார். படம் அதற்கான வேலைகள் அதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும்.