பிக் பாஸில் ஷகிலாவின் மகளுக்கு போட்டியாக களமிறங்கும் நமீதா.. உலக அழகி பட்டம் வென்ற திருநங்கை.!

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது.

எனவே இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

எனவே இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சூசன் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது. இவர்களுடன் திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்களை களமிறக்கி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில், இந்த முறை தமிழ் பிக்பாஸிலும் திருநங்கைகளை களமிறக்க உள்ளனர். ஏற்கனவே இந்த சீசனில் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா கலந்து கொள்ளப் போவதாக தகவல் கிடைத்தது.

namitha-cinemapettai
namitha-cinemapettai

தற்போது இரண்டாவது திருநங்கையாக 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்ட டைட்டில் வென்று, அதன் பின்பு 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நமிதா மாரிமுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.