வாரிசு, துணிவை விட இவங்க சண்டை பெரும் சண்டையா இருக்கு.. எதிர்பார்ப்பை எகிற விட்ட தனுஷ்

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு துணிவு போன்ற 2 படங்களின் வசூல் தற்போது வரை சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதால் இரண்டு படங்களில் எது பெஸ்ட் என்ற கேள்வி எல்லோருக்கும் சாதாரணமாகவே தோன்றும்.

அப்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு இன்னமும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கும்போது, அதைவிட இரண்டு ஹீரோக்களின் சண்டை பெரும் சண்டையா இருக்கும் போல.

தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து தனுஷ் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனுஷின் வாத்தி படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்து வருகிறார். சமீபத்தில் வாத்தி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.  தனுஷ் நடித்த வாத்தி படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த மாசம் எந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்று கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்று எதிர்பார்த்தது படக்குழு.

ஆனால் அதற்கு போட்டியாக வருகிறது ஜெயம் ரவியின் அகிலன் படம். கல்யாண கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்த, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்தது. இதில் ஜெயம் ரவி வங்காள வரைகுடா எல்லையில் இருக்கக்கூடிய ஒரு கேங்ஸ்டர் ஆக நடித்து, அங்கு எப்படி கிரைம் பிசினஸை நடத்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

இதில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தில் தனியா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோறும் இணைந்து நடிக்கின்றனர். ஆகையால் ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் தனுஷின் வாத்தி போன்ற இரண்டு படத்தையும் வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றனர்.

ஆனால் அவர்கள் முதலில் தனுஷ் நடித்த வார்த்தை படத்துக்கு தான் பிரபரன்ஸ் கொடுக்கின்றனர். இந்த படம் கிடைக்காதவர்கள் தான் ஜெயம் ரவி படம் எடுக்கிறார்கள். இந்த ரெண்டு படத்துக்கும் வாரிசு, துணிவு போல் போட்டி ஏற்பட்டு வருகிறது.