பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பாக வந்தபோது ரசிகர் ஒருவர் அவரை அசிங்கமாக திட்ட, பதிலுக்கு அவரும் வாய் விட இணையதளமே ரணகளம் ஆகிவிட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி என்று சொன்னால் பலரும் சண்டைக்கு வருவார்கள். அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்த பெயரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று கெடுத்துக்கொண்டார் ஜூலி.
சமூக வலைதளத்தில் மட்டுமே ஜூலிக்கு மவுசு இல்லை மார்க்கெட் இல்லை என கூறி வருகின்றனர். ஆனால் தினமும் டிவி பேட்டிகள், போட்டோ ஷூட் என சகலமும் சௌகரியமாக வசதியாக வாழ்ந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி ஒரு செலிபிரிட்டி போல மீடியாக்களால் கொண்டாடப்படுகிறார். அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவதுமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜூலி நேரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஜூலியை பார்த்து லூசு கூ*** என அசிங்கமாக கமெண்ட் செய்தார்.
இதைப்பார்த்த டென்ஷனான ஜூலி, உங்க அம்மா உன்னையும் அங்கிருந்து தானே பெத்தா என உணர்ச்சிவசப்பட்டு அந்த ரசிகருடன் சமூகவலைதளத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார். இனிமேல் கெட்ட வார்த்தை பேசினா அவ்வளவுதான் என மிரட்டிவிட்டார். பிரபலங்கள் நேரில் வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வருவது சகஜம் தானே.
