அஜித், விஜய் ரெண்டு பேரும் வேண்டாம், வெறுத்த இயக்குனர்.. மத்தளம் போல் இரு பக்கமும் விழும் அடி

Ajith, Vijay are not wanted, the director hated it: சமீப காலமாகவே அஜித்தின் ஒரு படத்தை ஒரு வருஷமா எடுத்துட்டு இருக்காங்க. அதிலும் இப்போது அஜித்தின் 62-வது பட வாய்ப்பு பொக்கிஷமா கிடைச்சாலும், அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் பிரபல இயக்குனர் விழி பிதுங்கி நிற்கிறார். இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு கூட முடியல. ஆனா பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு கால் ஷீட் தர முடியாது என்று அஜித் அடம்பிடிக்கிறார். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் மகிழ்திருமேனி திணறி கொண்டிருக்கும் சமயத்தில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த நீரவ் ஷா திடீரென படப்பிடிப்பிலிருந்து விலகி விட்டார்.

அவருக்கு பதில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் விருப்பமான ஒளிப்பதிவாளராக இருக்கக்கூடிய நீரவ் ஷா இதற்கு முன்பு கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறார்.

மகிழ்திருமேனியின் நிலைமை தான் பாவமா இருக்கு

அஜித் தன்னுடைய படத்தில் நீரவ் ஷா இருக்க வேண்டும் என, அப்போதிலிருந்து இப்போது வரை விரும்புகிறார். என்னுடைய லக்கி ஜாம் ஆன ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மறுபடியும் வந்தாதான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று அஜித் சொல்லிவிட்டாராம்.

ஆனா நீரவ் ஷா வேற லெவல் போய்விட்டார், அவரை இப்ப பிடிக்க முடியல. இப்போ மகிழ்திருமேனியின் நிலைமை தான் பாவமா இருக்கு, என்ன செய்வது என்று தெரியாமல் நொந்து போய் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி வாங்குகிறார். இனிமே தல, தளபதி போன்ற பெரிய நடிகர்களோட படத்தை எடுக்கவே கூடாது என மகிழ்திருமேனி வெறுத்துப் போய்விட்டார்.